நாசா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முகமது பின் ரஷித் விண்வெளி மையம் (எம்.பி.ஆர்.எஸ்.சி) கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மனிதர்களுடன் சென்று நிலவு சுற்றி வரும் முதல் விண்வெளி நிலையமாக அமைக்கப்பட்டுள்ள கேட்வேக்கு யு.ஏ.இ ஏர்லாக் தயாரிக்கும் என்று கூறியது.
கேட்வே லூனார் ஸ்பேஸ் ஸ்டேஷன், ஆர்ட்டெமிஸ் திட்டம் மற்றும் நாசாவின் பிற நிலவு திட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவு வழங்கும் எனக் கூறியுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய விண்வெளி கவுன்சிலின் தலைவராக, விண்வெளியில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்துள்ளேன். அமெரிக்காவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான இன்றைய அறிவிப்பும் கூட்டாண்மையும் இந்த முக்கியமான வேலையை முன்னெடுத்துச் செல்கின்றன.
நமது வளங்கள், அறிவியல் திறன் மற்றும் தொழில்நுட்ப திறன் ஆகியவற்றை இணைப்பதன் மூலம், அமெரிக்காவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் விண்வெளிக்கான நமது கூட்டுப் பார்வையை மேலும் மேம்படுத்தி, பூமியில் உள்ள அனைவருக்கும் அசாதாரண வாய்ப்புகளை வழங்குவதை உறுதி செய்யும்” என்று கூறினார்.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை கேட்வே மூலம் மனித விண்வெளிப் பயண ஒத்துழைப்பை விரிவுபடுத்துகின்றன. MBRSC ஆனது கேட்வேயின் க்ரூ மற்றும் சயின்ஸ் ஏர்லாக் தொகுதியை தயாரிக்கும். மேலும் இந்த புதிய ஒத்துழைப்பின் கீழ் எதிர்கால ஆர்ட்டெமிஸ் பயணத்தில் சந்திர விண்வெளி நிலையத்திற்கு யு.ஏ.இ விண்வெளி வீரரும் அனுப்பபடும் என்று கூறப்பட்டுள்ளது.
MBRSC ஏர்லாக்கை இயக்குவது மட்டுமல்லாமல், சந்திர விண்வெளி நிலையத்தின் வாழ்க்கைக்கான பொறியியல் ஆதரவையும் வழங்கும். அதன் ஏர்லாக், கேட்வேயின் அழுத்தப்பட்ட குழு தொகுதிகள், வசிக்கக்கூடிய சூழல், விண்வெளியின் வெற்றிடத்திற்கு பணியாளர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி இடமாற்றங்களை அனுமதிக்கும்.
கேட்வே விண்வெளி நிலையம், சந்திரனைச் சுற்றிலும் மனிதகுலம் ஒரு நிலையான இருப்பை நிறுவ உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் இது ஒரு இடமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“