இந்த தொழிநுட்பக் காலத்தில் எல்லாமே ஸ்மார்ட்போனில், உணவில் இருந்து போக்குவரத்து வரை எல்லாமே இருக்கும் இடத்தில் கிடைக்கிறது. அது போல் தற்போது போக்குவரத்தில் முன்னணியில் இருக்கும் உபர் (uber) புதிய 3 அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பயணத்தை எளிமை படுத்தும் விதமாக மற்றவர்களுக்கு பயணத்தை புக் செய்யும் வசதியும் இதில் அடங்கும்.
இந்த அறிவிப்பு விழா பெங்களுரில் நடைபெற்றது, அதில் உபர் துணை தலைவர் டேனியல் கிராப் கலந்துக்கொண்டார்.
இந்த புதிய அப்டேட் மூலம் இந்திய வாடிக்கையாளர்கள் m.uber.com என்னும் தங்கள் வலைதளத்தில் பயணத்தை பதிவு செயலாம். இந்த அப்டேட் கொண்டு வரக்காரணம், இந்தியாவில் அதிக பயன்பாடு இருப்பதால் இணைப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது. இதனை குறைக்கவே இதை கொண்டு வந்துள்ளதாக உபர் தெரிவிக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் இணையம் இருந்தால் இந்த வலைதளத்தில் புக் செய்து கொள்ளலாம்.
அடுத்து, போன் கால் செய்து பயணத்தை பதிவு செய்யும் அமைப்பை அறிவித்துள்ளது. நேரடியாக கால் செய்து பதிவு செய்யலாம், பயணத்தை பற்றிய அனைத்து விவரங்களும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. அதே கைபேசி என்னை கொண்டு புக்கிங்கை ரத்து செய்து கொள்ளலாம்.
மூன்றாவதாக, மற்றவர்களுக்காக நாம் பயணத்தை பதிவு செய்யலாம். அதாவது பெங்களூரில் இருக்கும் ஒருவர் சென்னையில் இருப்பவருக்கு பதிவு செய்து தரலாம். வாகனம் மற்றும் ஓட்டுனரின் விவரம் பயணம் செய்பவரின் கைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். பயணத்தை பதிவு செய்தவர்கள் பயண கட்டணத்தை செலுத்தலாம்.
இன்னும் சில வாரங்களில் இது பயன்பாட்டிற்கு வரவிருகிறது.
இன்டர்நெட் சேவை இல்லாமல் இடத்தை பதிவு செய்யும் அப்டேட் கொண்டு வர உபர் குழு முயற்சி செய்து வருகிறது. இருப்பினும், பயணத்தை பதிவு செய்ய இன்டர்நெட் சேவை நிச்சயம் தேவை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உபர் ஈட் என்னும் உணவு வியோகத்தை உபர் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.