ஆதார் இந்தியாவின் தனித்துவ அடையாள அட்டையாக உள்ளது. சிம் கார்டு வாங்குவது, ஷாப்பிங், வங்கி பரிவர்த்தனை, வெளிநாடு செல்வது என எல்லாவற்றிக்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இந்திய குடிமகனாக இருக்க ஆதார் அட்டை அவசியமாகிறது. அந்த வகையில் ஆதார் கொண்டு பல மோசடிகள் செய்யப்படுகிறது. அதை தடுக்கும் விதமாக மத்திய அரசு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. Two-layered security mechanism என்ற பாதுகாப்பு அம்சத்தை சமீபத்தில் உருவாக்கியுள்ளது. மோசடிகளை தடுக்க, குடிமக்களின் ஆதார் விவரங்களைப் பாதுகாக்க இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் (AI/ML) மூலம் Two-layered security mechanism அம்சத்தை சேர்த்துள்ளது, இது ஆதார் அட்டை சரிபார்ப்பு செயல்பாட்டின் போது கைரேகைகளை அங்கீகரிக்கும் மற்றும் மோசடி தொடர்பான முயற்சிகளை கண்டறியும்.
புதிய தொழில்நுட்ப மேம்படுத்தல் ஸ்கேன் செய்யப்பட்ட கைரேகையின் liveliness-யை சரிபார்க்க "ஃபிங்கர் மினுஷியா மற்றும் ஃபிங்கர் இமேஜ்" இரண்டின் கலவையைப் பயன்படுத்தும். The new two-factor/layer அம்சம் கைரேகையின் உண்மையான தன்மையை சரிபார்க்க முடிகிறது. இதன் மூலம் மோசடி முயற்சிகளை தடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த new layer வெரிவிக்கேஷன் அம்சம் ஆதார் அங்கீகார பரிவர்த்தனைகளை இன்னும் வலுவானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கி, நிதி பரிவர்த்தனை, தொலைத்தொடர்பு மற்றும் அரசு உள்ளிட்ட துறைகளில் இது பெருமளவில் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/