ஆதார் அட்டை இந்தியாவில் மிக முக்கிய அடையாள அட்டையாகும். பாஸ்போர்ட், வங்கி கணக்கு முதல் மொபைல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஆதார் அட்டையை ஏ.டி.எம் கார்டு உள்ளது போல் பி.வி.சி ப்ளாஸ்டிக் அட்டையில் உங்கள் ஆதார் விவரங்களை பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளலாம். இதுவும் அதிகாரப்பூர்வமானது தான். ஆதாரை வழங்கும் மத்திய அரசின் UIDAI நிர்வாகம் இந்த பி.வி.சி ஆதார் அட்டையை வழங்குகிறது.
பி.வி.சி ஆதார் அட்டை ஆர்டர் செய்வது எப்படி?
1. UIDAI இணையதளத்திற்குச் செல்லவும்.
2. உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
3. பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சாவை நிரப்பவும்.
4. ஓ.டி.பி Request கொடுக்கவும்.
5. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
6. ‘My Aadhaar’ செக்ஷன் சென்று ‘Order Aadhaar PVC Card’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
7. உங்கள் தகவலை சரிபார்த்து ‘Next’ என்பதைக் கிளிக் செய்யவும்.
8. கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது UPI போன்ற உங்களுக்கு விருப்பமான கட்டண முறையைத் தேர்வு செய்யவும்.
9. ரூ.50-ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்தவும்.
10. பணம் செலுத்தியதும், UIDAI உங்கள் ஆதார் PVC கார்டு ஆர்டரைச் செயல்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“