ஸ்மார்ட்ஃபோன்களை பற்றி தெரிந்த உங்களுக்கு லைட் ஃபோன் பற்றி தெரியுமா?

உலக அளவில் பிரபலமான இந்த ஃபோனின் அடுத்த பதிப்பு லைட் ஃபோன்2 என்ற பெயரில் வெளிவரவுள்ளது.

இன்றைய இளைஞர்கள் மொத்த உலகத்தையும் ஸ்மார்ட்ஃபோனில் அடக்கி விட்டதாக நினைக்கின்றன. காரணம் தற்போது வெளியாகும் போன்களின் மூலம் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு மாறிவிட்டது தான்.

ஆனால். இவற்றிற்கு மாறாக வெளிவரவிருக்கும் புதிய படைப்பு தான் லைட் ஃபோன். ஸ்மார்ட்ஃபோன்களள்வை றுப்பவர்களுக்கு லைட் ஃபோன் மிகவும் பிடிக்கும். அழைப்புகளுக்கும், குறுஞ்செய்திகளுக்கு மட்டும் பயன்படும் இந்த ஸ்மார்ட் போன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகியது.

இருந்த போதும் அப்போது இந்த ஃபோனிற்கு கிடைக்காத வரவேற்பு தற்போது கிடைத்துள்ளது. கேஜட்ஸ் உலகில் மூழ்கியிருக்கும் இளைஞர்களை கேஜட்ஸ் அதன் அடிமைதனத்தில் இருந்து பிரித்து கொண்டு வரும் இந்த லைட் போன்கள் பெருமளவில் உதவுகின்றன. அதனாலேயே இதன் மவுசு இப்போது கூடியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலியர் மற்றம் டாங் என்பவர்கள் இந்த ஃபோனை 2015 ஆம் ஆண்டு கண்டுப்பிடித்தனர். கேஜட்ஸ் அடிமைத்தனத்தில் இருந்து வெளிவர முயற்சிக்கும் மக்களுக்கு இது பயன்படும் என்ற நோக்கத்திலே இந்த போனை கண்டுப்பிடித்துள்ளதாக, இதன் வெளியீட்டு விழாவில் தெரிவிக்கப்பட்டது.

காலிங் வசதி மற்றும் குறுஞ்செய்தி வசதியை மட்டும் கொண்டு உலக அளவில் பிரபலமான இந்த ஃபோனின் அடுத்த பதிப்பு லைட் ஃபோன்2 என்ற பெயரில் வெளிவரவுள்ளது.

×Close
×Close