சென்னையில் நடைபெறும் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான ஆசியாவின் மிகப்பெரிய உச்சி மாநாடு Umagine Chennai 2023 நிகழ்ச்சியில் பங்கேற்க 12,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இன்று (மார்ச் 23) தொடங்கும் மாநாடு மார்ச் 25 வரை நடைபெறுகிறது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் Umagine Chennai 2023 நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெறுகிறது.
Umagine Chennai 2023-ஐ முன்னிட்டு ஐஐடி-மெட்ராஸ் ரிசர்ச் பார்க் துறை (IITMRP) ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் அமைச்சர் பேசுகையில், முன்னதாக, இது போன்ற ஒரு நிகழ்வுக்காக நாம் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது தமிழகத்தில் ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறினார்.
ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் துறை தலைவர் அசோக் ஜுன்ஜுன்வாலா கூறுகையில், "ஐஐடியில் உள்ளதைப் போல மாநிலத்தில் மேலும் 3 ஆராய்ச்சி பூங்காக்களை 10 ஆண்டுகளில் அரசு ஏற்படுத்தலாம் என்று பரிந்துரைத்தார். திருச்சி-மதுரை காரிடார், கோயம்புத்தூர் மற்றும் ஓசூர்-கிருஷ்ணகிரி பகுதியில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கலாம். ஒவ்வொரு பகுதிகளிலும் 5-10 பொறியியல் பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் உருவாக்க வேண்டும் மற்றும் தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தொழில் கல்வித்துறை ஒத்துழைப்பை நல்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/