ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், சாம்சங் கார்னிவல் தள்ளுபடி விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்சாதன பொருட்களை தள்ளுபடி விற்பனையில் விற்பனை செய்கிறது. அதன்படி, தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விவரம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 7 இதன் ஒரிஜினல் விலை ரூ.46,000. இதன் விலை, ரூ. 23,010 தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்விலை 50% தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்தால், மேலும் ரூ.18,000 தள்ளுபடி செய்யப்படும். அதாவது, சாம்சங் கேலக்ஸி எஸ் 7-ஐ ரூ.5,090க்கு நீங்கள் பெறலாம்.
சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட்-ன் விலை ரூ.6,000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரிஜினல் விலை ரூ.17,990. தற்போது, ரூ.11,900க்கு இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. 64 ஜிபி உள்ளடக்க மெமரி, 5.5. இன்ச் முழு எச்டி டிஸ்பிளே, 3ஜிபி ரேம், 3300 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். அதேபோல், சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் 16 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் ரூ.9,999-க்கு விற்பனையாகிறது. ஃபிளிப்கார்ட்டில் 3ஜிபி ரேம் ஸ்மார்ட்போனில் இதுதான் குறைந்தவிலை ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2018/02/Samsung-1-300x200.png)
/tamil-ie/media/media_files/uploads/2018/02/Samsung-2-300x200.png)
சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ரூ.3,000 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 5.7 இன்ச் முழு எச்.டி டிஸ்பிளே, 13 எம்பி சென்சாருடன் கூடிய முன்பக்க மற்றும் ரியர் கேமரா, 4 ஜிபி ரேம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.
சாம்சங் கேலக்ஸி ஆன் 5 ஒரிஜினல் விலை ரூ.8,490. தற்போது ரூ.6,290 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 8 ஜிபி உள்ளடக்க மெமரி, 5 இன்ச் எச்டி டிஸ்பிளே, 8 எம்பி ரியர் கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா, 2600 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
சாம்சங் ஜே3 ப்ரோ, தற்போது தள்ளுபடி விலையில் ரூ.6990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் AMOLED டிஸ்பிளே கொண்டது என ஃபிளிப்கார்ட் வணிகத்தளம் தெரிவிக்கிறது. 16 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ரூ.35,900 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஜே7 ரூ.9,999க்கு விற்பனையாகிறது. அதேபோல், 32 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ரூ.11,990-க்கு விற்பனையாகிறது.
இந்த சாம்சங் கார்னிவல் தள்ளுபடி விற்பனையில் சாம்சங் டிவி, மைக்ரோவேவ், சலவை இயந்திரம், குளிர்சாதன பெட்டி ஆகியவையும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.