ரூ.10,000 தான் உங்க பட்ஜெட்டா? இந்த 5 அட்டகாசமான போன்களை மிஸ் பண்ணாதீங்க!

ரூ.10,000-க்கும் குறைவான விலையில், 5G இணைப்பு, 120Hz டிஸ்ப்ளே மற்றும் அதிக திறன் கொண்ட பேட்டரிகள் போன்ற சிறப்பம்சங்களுடன் பல ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட் பிரிவில், ரெட்மீ, போக்கோ போன்ற 5G போன்களும் கிடைக்கின்றன.

ரூ.10,000-க்கும் குறைவான விலையில், 5G இணைப்பு, 120Hz டிஸ்ப்ளே மற்றும் அதிக திறன் கொண்ட பேட்டரிகள் போன்ற சிறப்பம்சங்களுடன் பல ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட் பிரிவில், ரெட்மீ, போக்கோ போன்ற 5G போன்களும் கிடைக்கின்றன.

author-image
WebDesk
New Update
5g smartphones

ரூ.10,000 தான் உங்க பட்ஜெட்டா? இந்த 5 அட்டகாசமான போன்களை மிஸ் பண்ணாதீங்க!

ரூ.10,000-க்கும் குறைவான பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில், ஒரு காலத்தில் விலை உயர்ந்த மாடல்களில் மட்டுமே காணப்பட்ட அம்சங்கள் தற்போது கிடைக்கின்றன. வேகமான 5G இணைப்பு, நீண்ட பேட்டரிகள் மற்றும் சாப்டான டிஸ்ப்ளே போன்ற அம்சங்களுடன், இந்த விலைப் பிரிவில் பல சிறந்த மாடல்கள் போட்டியிடுகின்றன. நீங்க இப்போது வாங்கக்கூடிய 5 பெஸ்ட் ஸ்மார்ட்போன் பற்றி பார்க்கலாம்.

Advertisment

ரெட்மீ ஏ4:

ரூ.8,499 ஆரம்ப விலையில் கிடைக்கும் ரெட்மீ ஏ4 போன், Snapdragon 4s Gen 2 சிப்செட் மூலம் 5G ஸ்பீடு வழங்குகிறது. இதில் உள்ள 6.88 இன்ச், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய டிஸ்ப்ளே, இந்த விலைப் பிரிவில் சிறப்பான ஒன்றாகும். மேலும், 50MP மெயின் கேமரா, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர் ஓ.எஸ் இதில் முக்கிய அம்சங்கள். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 2 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னால் 50MP சென்சார், முன்புறம் 5MP கேமரா உள்ளது. அடிப்படை மாடல் 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டது (microSD மூலம் விரிவாக்கலாம்).

மோட்டோரோலா ஜி05:

ரூ.6,999 விலையில், மோட்டோரோலா ஜி5 போன் ஆண்ட்ராய்டு சாப்ட்வேர் மற்றும் பிரீமியம் வடிவமைப்பிற்காக தனித்து நிற்கிறது. 5ஜி ஸ்பீடு இதில் இல்லை என்றாலும், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 5,200mAh பேட்டரி மற்றும் தூசி, நீர் தெளிப்பிலிருந்து பாதுகாக்கும் ஐ.பி54 மதிப்பீடு போன்றவை இதன் பலமாகும். 6.67 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, 64GB ஸ்டோரேஜ், பின்புறத்தில் ஃபாக்ஸ் லெதர் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ இசட் 10 லைட் 5G:

அதிக பேட்டரி ஆயுள் விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இதில் 6,000mAh என்ற மிகப்பெரிய பேட்டரி உள்ளது. மேலும், ராணுவ தர நீடித்துழைப்பு சான்றிதழ் மற்றும் ஐபி64 நீர் எதிர்ப்பு ஆகியவை கூடுதல் பாதுகாப்பை அளிக்கின்றன. டைமென்சிட்டி 6300 சிப்செட்டில் இயங்கும் இந்த போன், 90Hz டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 8GB RAM, 256GB ஸ்டோரேஜ் வரை கிடைக்கிறது (microSD மூலம் 2TB வரை விரிவாக்கலாம்). 6.74 இன்ச் LCD, 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1,000 nits பிரகாசம் வரை ஆதரிக்கிறது. அமேசானில் ரூ.9,998-க்கு கிடைக்கிறது.

Advertisment
Advertisements

போக்கோ M7 5G:

ரெட்மீ ஏ4 போலவே, போக்கோ எம்7 5G-யும் Snapdragon 4 Gen 2 செயலி மற்றும் 120Hz டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 50MP பின் கேமரா மற்றும் 5,160mAh பேட்டரியுடன், 18W பாஸ்ட் சார்ஜிங்குடன் இது பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் ரூ.9,457-க்கு கிடைக்கிறது. 6GB மற்றும் 8GB RAM வகைகளில், 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் (microSD மூலம் 1TB வரை) கிடைக்கிறது.

லாவா பிளேஸ் 2 5G:

இந்தியத் தயாரிப்பான லாவா பிளேஸ் போன், Near-Stock Android அனுபவத்தை வழங்குகிறது. Dimensity 6020 சிப்செட் மற்றும் 50MP டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 90Hz டிஸ்ப்ளேவுடன் வரும் இந்த போன், அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ரூ.8,999 என்ற விலையில் கிடைக்கிறது. 18W சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரி உள்ளது. 4GB/64GB அல்லது 6GB/128GB ஆகிய இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்த 5 மாடல்களும் 5G, அதிக பேட்டரி அல்லது சிறந்த டிஸ்ப்ளே என ஏதோவொரு முக்கிய அம்சத்தை முன்னிறுத்தி, ரூ.10,000-க்கும் குறைவான விலையில் வலுவான போட்டியாளர்களாக உள்ளன.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: