/indian-express-tamil/media/media_files/2025/09/29/best-tws-earbuds-2025-09-29-15-10-41.jpg)
ஜே.பி.எல், ஒன்பிளஸ், ரியல்மீ... கம்மி பட்ஜெட், பிரீமியம் அனுபவம் தரும் டாப் 5 TWS இயர்பட்ஸ் மக்களே!
சந்தையில் ரூ.2,000-க்கும் குறைந்த பட்ஜெட்டில், அம்சங்களில் எந்தக் குறைபாடும் இல்லாத ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (TWS)-ஐ தேடுகிறீர்களா? சக்திவாய்ந்த சவுண்ட் டிரைவர்கள் முதல் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC), நீண்ட பேட்டரி ஆயுள், மற்றும் கேமிங்கிற்கான குறைந்த தாமத வேகம் (Low Latency) வரை, இந்த மலிவு விலை இயர்பட்ஸ் பல பிரீமியம் அனுபவங்களைத் தருகின்றன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சந்தையில் பிரபலமாக உள்ள 5 மாடல்கள் CMF by Nothing Buds 2a, JBL Wave Beam, OnePlus Nord Buds 3, boAt Airdopes Loop, realme Buds T310 அவற்றின் அம்சங்களுடன் ஒப்பிட்டு, சரியானதைத் தேர்வு செய்ய உதவுகிறோம்.
1. சி.எம்.எஃப். நத்திங் பட்ஸ் (CMF by Nothing Buds 2a)
Dirac-ஆல் ட்யூன் செய்யப்பட்ட 12.4 மி.மீ பயோ-ஃபைபர் டைனமிக் டிரைவர்கள் மற்றும் அல்ட்ரா பாஸ் டெக்னாலஜி 2.0 உடன், இந்த மாடல் பன்ச்சி சவுண்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 42 dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவு மற்றும் டிரான்ஸ்பரன்சி மோட் இதில் உள்ளது. க்ளியர் வாய்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய 4 HD மைக்ரோஃபோன்கள், ஐ.பி.54 நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் திறன், டூயல்-சாதன இணைப்பு போன்ற அம்சங்களுடன் வருகின்றன. பட்ஸில் 8 மணிநேரம் மற்றும் கேஸுடன் சேர்த்து 35.5 மணிநேரம் பேட்டரி நீடிக்கும். இதன் விலை ரூ.1,699.
2. ஜே.பி.எல். வேவ் பீம் (JBL Wave Beam)
எளிதான ஸ்டிக்-க்ளோஸ்டு (stick-closed) வடிவமைப்புடன் வரும் இது, 8 மி.மீ டிரைவர்கள் மற்றும் JBL டீப் பாஸ் சவுண்டுடன் வருகிறது. இதில் 32 மணிநேரம் பிளேபேக் (8 மணிநேரம் + 24 மணிநேரம்) கிடைக்கும், மேலும் குயிக் சார்ஜிங் வசதியும் உள்ளது. Smart Ambient தொழில்நுட்பம் (Ambient Aware மற்றும் TalkThru மோட்கள்), VoiceAware உடன் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ கால்கள் மற்றும் முழுமையான ஆப் கஸ்டமைசேஷன் அம்சங்கள் உள்ளன. பட்ஸ்கள் ஐபி54 மற்றும் கேஸ் ஐபிX2 ரேட்டிங் பெற்றுள்ளன. இதன் விலை ரூ.1,999.
3. ஒன்ஸ்பிளஸ் நார்டு பட்ஸ் (OnePlus Nord Buds 3)
12.4 மி.மீ டைட்டானைஸ் செய்யப்பட்ட டைனமிக் டிரைவர்கள் மற்றும் BassWave 2.0 மூலம் இயங்கும் இந்த மாடல், 32 dB ANC மற்றும் தெளிவான அழைப்புகளுக்காக ஏ.ஐ சத்தம் குறைப்புடன் வருகிறது. டூயல் கனெக்ஷன் உடன் கூடிய ப்ளூத்டூத் 5.4 இணைப்பு உள்ளது. இதன் பேட்டரி ஆயுள் தனித்துவமானது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணிநேரம் மற்றும் ஒட்டுமொத்தமாக 43 மணிநேரம் வரை நீடிக்கும். 10 நிமிடத்தில் 11 மணி நேரம் பிளேபேக் தரும் ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி55 ரேட்டிங் மற்றும் கூகுள் பாஸ்ட் பேர் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. இதன் விலை ரூ.1,799.
4. போட் ஏர்பட்ஸ் (boAt Airdopes Loop)
ஓ.டபிள்யூ.எஸ் (Open Wearable Stereo) வகை இயர்பட் ஆகும். இதன் ஏர் கண்டக்ஷன் அமைப்பு காரணமாக சுற்றுப்புற ஒலிகள் சிறப்பாகக் கேட்கும். பாதுகாப்பான பிடிமானத்திற்காக க்ளிப்-ஆன் கிளாஸ்ப் வசதி உள்ளது. 12 மி.மீ டிரைவர்கள், 50 மணிநேரம் வரையிலான ஈர்க்கக்கூடிய பேட்டரி ஆயுள், 10 நிமிடத்தில் 200 நிமிட ப்ளே டைம் தரும் ASAP சார்ஜ் வசதி உள்ளன. Quad மைக்குகள், ENX Tech அழைப்புகளை மேம்படுத்துகின்றன. 40 மி.நொடி Low Latency கொண்ட பீஸ்ட் மோட் மற்றும் ஐபிX4 எதிர்ப்புத் திறன் ஆகியவை இதன் கூடுதல் சிறப்பம்சங்கள். இதன் விலை ரூ.1,599.
5. ரியல்மீ பட்ஸ் (realme Buds T310)
12.4 மி.மீ டைனமிக் பாஸ் டிரைவர் மற்றும் 46 dB Hybrid ANC உடன், இது ஆழமான இசையைக் கேட்பதில் கவனம் செலுத்துகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் மற்றும் கேஸுடன் 40 மணிநேரம் நீடிக்கும். 360° ஸ்பேஷியல் ஆடியோ, AI டீப் கால் சத்தம் குறைப்பு, 45 மி.நொடி அல்ட்ரா-லோ லேட்டன்சி கேமிங் மோட் மற்றும் IP55 ரேட்டிங் ஆகியவை இதில் உள்ளன. இதன் விலை ரூ.1,799.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.