வரலாற்று சிறப்புமிக்க அப்பல்லோ 11 திட்டத்தில் வீரர்கள் தரையிறங்கிய தளத்திற்கு அருகில் ஒரு குகை இருப்பதை உறுதி செய்யும் வகையில், நிலவில் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.
இத்தாலிய விஞ்ஞானிகள் தலைமையிலான குழு இந்த கண்டுபிடிப்பை செய்துள்ளனர். இது எதிர்கால நிலவு ஆய்வு திட்டம் மற்றும் வாழ்விடத்திற்கு பேருதவியாக இருக்கும் என கூறியுள்ளனர்.
நிலவின் ஆழமான குழியிலிருந்து அணுகக்கூடிய இந்த குகை, 55 ஆண்டுகளுக்கு முன்பு நிலவு மண்ணில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த இடத்திலிருந்து வெறும் 400 கிலோமீட்டர் தொலைவில் இந்த குகை அமைந்துள்ளது.
எரிமலை வெடிப்பால் உருவான இந்த குகை, சந்திர மேற்பரப்பில் அடையாளம் காணப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஒரேமாதியான குகைகளில் ஒன்றாகும்.
நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரின் ரேடார் அளவீடுகளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் பூமியில் மேற்கொள்ளப்பட்ட தரவுகளை ஒப்பிட்டனர். நேச்சர் வானியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு கட்டுரையில் குகைகள், குறைந்தது 40 மீட்டர் அகலமும், பத்து மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும் என்று கூறிப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“