சூரிய குடும்பத்தில் எந்த கிரகங்களில் தண்ணீர் உள்ளது என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை (JWST) பயன்படுத்தி, யுரேனஸைச் சுற்றி வரும் 27 நிலவுகளில் ஒரு நிலவில் கார்பன் டை ஆக்சைடு பனி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
"யுரேனஸின் நிலவுகள்" திட்டத்தில் பணிபுரியும் குழு, அம்மோனியா, கரிம மூலக்கூறுகள், நீர் அல்லது கார்பன் டை ஆக்சைடு பனியின் தடயங்களைக் கண்டறிய யுரேனஸைச் சுற்றி வரும் 4 குறிப்பிட்ட நிலவுகளை நெருக்கமாக ஆய்வு செய்து வருகிறது.
ஜேம்ஸ் வெப் மூலம் நடத்தப்பட்ட 21 மணிநேர ஆய்வுக்குப் பிறகு, விஞ்ஞானிகள் யுரேனஸின் நிலவு ஏரியல் (Ariel) நிலவின் மேற்பரப்பில் கார்பன் டை ஆக்சைடு பனி இருப்பதைக் கண்டறிந்தனர்.
கார்பன் டை ஆக்சைடு பனி என்பது ஏரியல் நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் ஒரு திரவ கடல் பாய்கிறது என்பதற்கான அறிகுறி என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ஏரியலின் மேற்பரப்பில் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பனேட்டுகளின் தடயங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். நீர் பாறைகளுடன் தொடர்பு கொள்ளும்போது இந்த தாதுக்கள் உருவாகின்றன என்று கூறப்படுகிறது.
இதுபோன்று நிலவு கடல்கள் ஏற்கனவே வியாழனின் மூன்று பெரிய நிலவுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் நீர்நிலைகள் இருப்பதால் அங்கு யாரேனும் வாழ்கிறார்களா? என்ற கேள்வியை விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.