Union Budget 2019 New incentives for electric vehicles : இன்று இந்தியாவின் மத்திய முழு நிதிநிலை அறிக்கை அறிவிக்கப்பட்டது. நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இரு தரப்பினருக்கும் புதிய சலுகைகளை வழங்கியுள்ளது இந்த அறிக்கை.
இந்த கட்டுரையின் முழுமையான ஆங்கில பிரதியை படிக்க
நிர்மலா சீதாரமன் அறிவித்த இந்த அறிக்கையில், ஏற்கனவே ஜி.எஸ்.டி கவுன்சிலில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5% மாக குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அதே போன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்காக வாங்கப்பட்ட வங்கிக் கடனில் 1.5 லட்சம் ரூபாய்க்கான வரிகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின் படி எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் மேலும் பல்வேறு வரிச்சலுகைகளை பெறுவதை இந்த இந்த பட்ஜெட் உறுதி செய்கிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டினை உறுதி செய்வதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ்ட் பேட்டரி மற்றும் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த திட்டங்களால் முழு பயன்பாட்டினை அடைகின்றன. இது சுற்றுச்சூழலுக்கும் ஏற்றவகையில் இருப்பதால் இந்த மோட் ஆஃப் ட்ரான்ஸ்போர்ட்டேசனை ஊக்குவிக்கிறது மத்திய அரசு.