Upcoming mobile phones in india 2021; Realme, Oneplus, Samsung, LG Smartphones in 2021 : சோதனை மற்றும் சவாலானதாகக் கருதப்பட்ட 2020-ம் ஆண்டிலும், தொலைபேசி தயாரிப்பாளர்கள் தொடர்ந்து புதிய மாடல்களைத் தயாரித்தனர். இந்த ஆண்டு முழுவதும் நம்பிக்கைக்குரிய ஸ்மார்ட்போன்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்தோம். கண்கட்டி வித்தைகளை விட நுகர்வோருக்குப் பிடித்த பயன்பாடு மற்றும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தொற்றுநோய் இன்னும் நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதால், அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்கள் எல்லாவற்றையும் விட அனுபவத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். 2021-ன் தொடக்கத்தில் என்ன ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது? பார்க்கலாமா!
சாம்சங் கேலக்ஸி எஸ் 21
கேலக்ஸி எஸ் 21-ஐ புறக்கணிக்கவே முடியாது. அடுத்த மாதம் முன்கூட்டிய வெளியீடு எதிர்பார்க்கப்படுவதால், சாம்சங் முதன்மை கேலக்ஸி எஸ் சீரிஸை விளம்பரப்படுத்துவதில் எந்த செலவும் செய்யாது. கேலக்ஸி எஸ் 21 பற்றி ஏற்கெனவே நிறைய அறியப்பட்டிருந்தாலும், சாம்சங் கேலக்ஸி எஸ் 21 ஃபேன் பதிப்பை (Fan Edition (FE)) அறிமுகப்படுத்துமா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதற்கும் மேலாக, கேலக்ஸி எஸ் மற்றும் நோட் லைன்களை ஒன்றிணைக்க சாம்சங் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறோம்.
ஒன்ப்ளஸ் 9
சிறந்த 2020-ஐ ஒன்ப்ளஸ் கொண்டிருக்கவில்லை. பலர் அதன் தயாரிப்பு மூலோபாயத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். ஒன்ப்ளஸ் 9 மற்றும் ஒன்ப்ளஸ் 9 ப்ரோ ஆகிய இரண்டு தொலைபேசிகளையும் அறிமுகப்படுத்தும்போது இந்த ஆண்டு ஒன்ப்ளஸ் என்ன தந்திரோபாயங்களை பின்பற்றும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அந்த ஸ்ட்ராட்டஜிக்கள் மிகவும் விசுவாசமான ஒன்ப்ளஸ் ரசிகர்களைப் பிரியப்படுத்த வேண்டும். இப்போதே, இந்த சாதனங்கள் சிறந்த காட்சி, சார்ஜிங் வேகம் மற்றும் உயர்மட்ட விவரக்குறிப்புகளை வழங்கும் என்று பரிந்துரைக்கின்றன. ஆனால், இது போதுமானதாக இருக்குமா? ஆப்பிள் மற்றும் சாம்சங்கின் போட்டி அதிகரித்து வருவதால், ஒன்ப்ளஸ் அதன் பிரீமியம் பிராண்ட் நிலையைத் தக்கவைக்க நிறைய நிரூபிக்க வேண்டும்.
சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப் லைட்
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பொதுவாகவே விலை உயர்ந்தவை. ஆனால், அது அடுத்த ஆண்டு மாறக்கூடும். சாம்சங்கின் மொபைல் தகவல்தொடர்பு வணிகத்தின் தலைவரான டி.எம். ரோ, அடுத்த தலைமுறையினரின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வரிசை, “அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும்” என சமீபத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். சாதனங்களுக்கு பெயரிடவில்லை என்றாலும், சாம்சங் 2021-ம் ஆண்டில் நான்கு மடிக்கக்கூடிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்துவதாக வதந்தி பரவியுள்ளது. கேலக்ஸி Z Flip லைட்டின் அறிமுகம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையை வரும் ஆண்டு மிகவும் மாற்றக்கூடும். அசல் கேலக்ஸி இசட் ஃபிளிப் தற்போது ரூ.109,999-க்கு விற்கப்படுகிறது. எனவே லைட் பதிப்பிற்கு சுமார் 74,000 ரூபாய் செலவாகும். ரூ.74,000 விலையில் மடிக்கக்கூடிய தொலைபேசி மலிவானது அல்ல. ஆனால், கேலக்ஸி Z Fold 2-உடன் ஒப்பிடும்போது இது இன்னும் மலிவுதான்.
ரியல்மீ ரேஸ்
கடந்த ஆண்டு ரியல்மீ எக்ஸ் 50 அறிமுகமான பிறகு, இந்த நிறுவனம் உயர்நிலை பிரிவில் என்ன கொண்டு வருகிறது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இது எக்ஸ் 60 அல்லது ரியல்மீ ‘ரேஸ்’ ஆக இருந்தாலும், முதன்மையான பிரிவைப் பற்றி ரியல்மீ தீவிரமாக உள்ளது. அதன் விவரங்கள் இப்போது பற்றாக்குறையாக உள்ளன. ஆனால், “ரேஸ்”, ரியல்மீயின் முதல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 கைபேசியாக இருக்கும். “ரேஸ்” என்பது உயர்நிலை முதன்மைக்கான குறியீட்டுப் பெயர் என்பதால், அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் வெளியீட்டுத் தேதி இரண்டும் மறைவாகவே உள்ளன.
எல்ஜி ரோலபில் ஸ்மார்ட்போன்
கடந்த ஆண்டு உயர்நிலை தொலைபேசி பந்தயத்தில் விங், எல்ஜியை மீண்டும் கொண்டு வந்தால், வரவிருக்கும் ரோலபில் தொலைபேசி ஸ்மார்ட்போன்களில் அடுத்த அத்தியாயத்திற்கான தொனியை அமைக்கும். எல்ஜியின் புதிய ரோலபில் தொலைபேசி என்னவென்று யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால், இது ஆண்டின் முதல் பாதியில் சந்தைக்கு வரும் ரோலிங் டிஸ்ப்ளே கொண்ட முதல் தொலைபேசியாக இருக்கும். ரோலபில் தொலைபேசி என்றால் தொலைபேசி காட்சியை நீட்டிக்க முடியும். அதாவது மொபைலின் ஒரு விளிம்பில் இழுத்தால், உங்கள் வழக்கமான அளவிலான ஸ்மார்ட்போன் ஒரு டேப்லெட் அளவிற்கு மாறும். ஒப்போ மற்றும் டி.சி.எல் உள்ளிட்ட பல பிராண்டுகள் ஏற்கெனவே உள்நாட்டில் ரோலபில் தொலைபேசிகளில் சோதனை செய்கின்றன. எல்ஜியின் ரோலபில் தொலைபேசி சுமார் 2500 டாலருக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.