/indian-express-tamil/media/media_files/2025/06/10/5aRZYtmrC6Y1tHvuSkhA.jpg)
கூகுள் குரோம் பயனர்களே உஷார்! வந்தது ஆபத்து: பாதுகாப்பாக இருப்பது எப்படி?
உலகளவில் கூகுள் குரோமில் (Google Chrome) கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு உங்கள் கணினியை தாக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே 27, 2025 அன்று, Google Threat Analysis Group மூலம் இந்த மிகப்பெரிய குறைபாடு கண்டறியப்பட்டது. இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள், பயனர்களின் அனுமதி இல்லாமல், கணினியில் பல தீய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இது குரோம் புரோசரில் உள்ள வி8 ஜாவா ஸ்கிரிப்ட் இன்ஜினில் ஆபத்தான செயல்முறைகளை செய்கிறது என்று கூகுள் தெரிவித்திருக்கிறது. இது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் ஓஎஸ் உள்ளிட்ட பல ஓஎஸ்களில் இது பாதிப்பை ஏற்படுத்தும் கூகுள் எச்சரித்திருக்கிறது.
உங்கள் Chrome பாதுகாப்பானதா?
இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அப்டேட்டானது கடந்த மே 28, 2025 அன்று வெளியிடப்பட்டது. ஆனால் பலருக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் இந்த அப்டேட்டை மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். இதனால், அவர்களது சிஸ்டம் அல்லது லேப்டாப் ஆபத்தை சந்திக்கலாம். உங்கள் சிஸ்டம் சரியாக இருக்கிறதா என தெரிந்துகொள்ள கீழ்கண்ட வழிகளை பின்பற்றலாம்.
Chrome-இல் மேல்பக்க வலப்புறத்தில் உள்ள (⋮) என்பதை கிளிக் செய்யவும்.
Help > About Google Chrome என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது உங்கள் address bar-இல்
chrome://settings/help
என டைப் செய்யவும்.
உங்கள் Chrome பதிப்பு 137.0.7151.68 அல்லது அதற்கு மேல் என்றால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதற்கு குறைவான பதிப்பு இருந்தால், குரோம் தானாகவே புதிய அப்டேட்டை மேற்கொள்ளும். ஆனால் சில நேரங்களில் நீங்களாக மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆன்லைன் மோசடி குறித்து எச்சரிக்கும் குரோம்:
Chrome just got even better at spotting online scammers. Enhanced Protection mode now offers instant protection against emerging scams, while AI-powered warnings for Chrome on Android keep you safe from malicious notifications.
— Chrome (@googlechrome) May 8, 2025
Learn more: https://t.co/dkWkd2nTG7pic.twitter.com/LrO8z2izZB
இந்த பிரச்னை பற்றிய விரிவான தகவல்களை கூகுள் இன்னும் வெளியிடவில்லை. வழக்கமானது என கூறப்படட்டாலும் அப்டேட் உடனடியாக மேற்கொள்வது பல வழிகளில் நன்மை பயக்கும். குறிப்பாக குரோம் மூலம் இணையத்தை பயன்படுத்தும் தடையின்றி வேகமாக செயல்படும் என்று கூறப்படுகிறது. மேலும் குரோம் பாதுகாப்பானதாகவும் இருக்கும். இதனால் இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் உடனடியாக அப்டேட் செய்வதன் மூலம் ஹேக்கர்களின் மோசடிகளில் சிக்க வேண்டியிருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.