ஆதார் அட்டை எடுத்து 10 ஆண்டை கடந்தவர்கள் தங்களது தகவல்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என UIDAI கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தப் புதுப்பிப்பை ஆதார் மையங்கள் மட்டுமின்றி ஆன்லைனிலும் செய்யலாம்.
இது குறித்து UIDAI வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “10 ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்ட மற்றும் எந்த புதுப்பிப்பும் செய்யாத அட்டைதாரர்கள் தங்கள் ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.
அட்டைதாரர்கள் தேவையான கட்டணத்தைச் செலுத்தி அடையாள ஆவணம் மற்றும் வசிப்பிடச் சான்றை புதுப்பிக்கலாம். இந்த வசதி ஆதார் போர்டலில் அல்லது ஆதார் மையத்தில் செய்துகொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த புதுப்பிப்பு கட்டாயமா என்பது குறித்து சட்டப்பூர்வமாக அமைப்பு எதுவும் கூறவில்லை. இந்தியர்களின் தனித்துவமான அடையாள அட்டையான ஆதார்-ஐ புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என முன்பும் UIDAI கேட்டுக்கொண்டது என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil