கூகுள் ”க்ரோமுக்கு” பிரச்சனை… உடனே அப்டேட் செய்யுங்கள்… எச்சரிக்கும் வல்லுநர்கள்!

இணையத்தை அனுகுவதற்கு மிகவும் பிரபலமான வழியான இந்த இணைய பிரவுசரில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் உண்மையிலேயே தீவிரமானது தான்.

Update Google Chrome latest version immediately to rectify the chances of hacking
Update Google Chrome latest version immediately to rectify the chances of hacking

Update Google Chrome latest version immediately to rectify the chances of hacking  ” எச்சரிக்கை : உங்கள் கூகுள் குரோம் உலாவி (browser) ஐ இப்போதே அப்டேட் செய்துக்கொள்ளுங்கள். வெறு எதுவும் இதைவிட முக்கியமில்லை.  நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரை பயன்படுத்துபவரா அப்படியானால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டீர்கள். உங்களுக்கு பிடித்தமான பிரவுசரில் ஒரு சிக்கலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதை உடனே ஏற்ற முறையில் சரி செய்ய வேண்டும்.

இது சமீபத்திய கூகுள் குரோம் மேம்படுத்தப்பட்ட பதிப்பில் (Google Chrome update version 80.0.3987.122) சரி செய்யப்பட்டுள்ளது. Windows, macOS மற்றும் Linux பயனாளர்களுக்கு இந்த சமீபத்திய பதிப்பு நிலையான பதிவிறக்கம் மூலம் கிடைக்கிறது. சமீபத்திய கூகுள் குரோம் அப்டேட் பதிப்பில் ஒரு குறிப்பிட்ட பாதிப்பு உள்ளது எனவே நீங்கள் உடனடியாக உங்கள் கணிப்பொறி மற்றும் Mac ல் இந்த இணைய பிரவுசரை அப்டேட் செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க : சந்திரனை இவ்வளவு துல்லியமாக நீங்கள் பார்த்ததுண்டா? நாசாவின் 4K வீடியோ வெளியீடு!

பெரும்பாலான பயனர்களை அதை அப்டேட் செய்து அந்த சிக்கலை சரிசெய்வது வரை பிழை விவரங்களை அணுகுவதும் அதற்கான இணைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளது, என கூகுள் தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு மிகவும் தீவிரமானது. இந்த பாதிப்பு JavaScript ஐ சுரண்டுவதன் மூலம் இணைய பிரவுசரில் வேண்டுமென்றே தவறுகளை ஏற்படுத்த முடியும். இதை hacker கள் பயன்படுத்தி அனுமதியற்ற கோட் களை கணிப்பொறியில் இயக்க முடியும்.

உங்கள் கணிப்பொறி அல்லது macOS அல்லது Linux இயந்திரத்தில் கூகுள் குரோமை பிரவுசரை அப்டேட் செய்ய முதலில் உங்கள் குரோம் பிரவுசரை ஒப்பன் செய்துக் கொள்ளுங்கள். About Google Chrome என்பதை தேர்ந்தெடுத்து அப்டேட்டை பதிவிறக்கி நிறுவுவதற்கு (download and install) அனுமதி கொடுங்கள். பல மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள, இணையத்தை அனுகுவதற்கு மிகவும் பிரபலமான வழியான இந்த இணைய பிரவுசரில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் உண்மையிலேயே தீவிரமானது தான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Update google chrome latest version immediately to rectify the chances of hacking

Next Story
ரயிலை விட ஒரு நல்ல நண்பன் இருக்க முடியுமா? – ‘சென்னை ரயில் அருங்காட்சியகம்’ ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express