டெபிட் கார்டுகள் அல்லது பிற கார்டுகளின் தேவை இல்லாமல், ஏடிஎம்களில் பணத்தை டெபாசிட் செய்யும் வகையில் ஆர்.பி.ஐ- என்.பி.சி.ஐ இணைந்து புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ஆகஸ்ட் 29, வியாழன் அன்று மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் (GFF) 2024 இல், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான டி ரபி சங்கர் யு.பி.ஐ மூலம் இயங்கக்கூடிய யு.பி.ஐ- ஐ.சி.டிஅம்சத்தை அறிமுகப்படுத்தினார்.
யு.பி.ஐ- ஐ.சி.டி பயன்படுத்தி யு.பி.ஐ வழியாக கார்டுலெஸ் டெபாசிட் செய்யலாம். இருப்பினும், இந்த அம்சம் ஏடிஎம்களில் மட்டுமே கிடைக்கும், இது பணத்தை டெபாசிட் செய்யவும் எடுக்கவும் பயன்படும் மெஷின்களில் மட்டும் பயன்படுத்த முடியும். இந்த வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“