நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின், யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் என அழைக்கப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளை எளிமையின் காரணமாக பல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. GooglePay, Phonepe, Paytm போன்ற யுபிஐ செயலிகள், தற்போது ஆன்லைன் பேமெண்ட் துறையில் ஆதிக்கம் செலுத்துக்கின்றன. இந்நிலையில், என்பிசிஐ, சிறிய அளவிலான பணப்பரிவர்த்தனைகளை இணையம் இல்லாமல் ஆப்லைன் வாயிலாக பணம் செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துல்ளது. இதனை, UPI லைட் அல்லது செல்போன் வேலட் என அழைக்கலாம்.
NPCIஇன் படி, இந்தியாவில் தினமும் 1 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிவர்த்தனைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதனை எளிதாக்க ங்கிகள் தங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். சிறந்த தொழில்நுட்பத்தையும், அதிக முதலீட்டையும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
UPI லைட் அறிமுகம்
இணைய வசதி இல்லாத சமயங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் பலர் சிரமப்பட்டிருப்போம். ஆஃப்லைனில் பரிவர்த்தனை செய்ய 123Pay அல்லது USSD அடிப்படையிலான UPI சேவையைப் பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இணைய வசதி இல்லாமல் உங்களால் Paytm, GooglePay செயலிகளை உபயோகித்து எல்லா QR குறியீட்டையும் ஸ்கேன் செய்திட முடியாது. இந்த சிக்கலை சரிசெய்ய (NPCI) புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், இணைய வசதி இல்லாத சூழலில், எந்த QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து ஆஃப்லைனிலே பணப் பரிவர்த்த்னைகளை மேற்கொள்ளலாம்.
NPCI இன் படி, இந்தியாவில் மொத்த சில்லறை பரிவர்த்தனைகளில் (பணம் உட்பட) குறைந்தது 75 சதவிகிதம் பரிவர்த்தனை ரூ100 மதிப்பிற்குக் குறைவாக உள்ளது.அதேபோல், மொத்த UPI பரிவர்த்தனைகளில் 50 சதவீத பரிவர்த்தனைகள் ரூ200க்குள் இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு, 200ரூபாய் வரை NPCI ஆஃப்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள அனுமதிக்கிறது. UPI லைட் ஆஃப்லைன் பயன்முறையில் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும்
UPI இல் இருந்து UPI லைட்டுக்கு பணப்பரிமாற்றம்
UPI லைட்டைப் பயன்படுத்து தேவையானது ஏதெனும் ஒரு யுபிஐ செயலி மட்டும் தான். UPI பயன்பாட்டின் எந்தப் பயனரும் தங்கள் UPI செயலியிலேயே “ஆன்-டிவைஸ் வாலட்” எனப்படும் UPI லைட்டை இயக்குவதற்கான விருப்பம் இருக்கும் என்று NPCI குறிப்பிடுகிறது. செயலி இயக்கப்பட்டதும், பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து UPI லைட்டுக்கு பணம் அனுப்பலாம்.
தற்போது, UPI லைட் இருப்பிலிருந்து டெபிட் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மற்றப்படி UPI லைட்டின் ரீஃபண்டு உட்பட அனைத்து கிரெடிட்களும் பயனரின் வங்கிக் கணக்கில் ஆன்லைனில் ப்ராசஸ் செய்யப்படும்.
UPI லைட் கட்டண பரிவர்த்தனையின் உச்ச வரம்பு ரூ. 200, இருப்பினும் சாதனத்தில் உள்ள வாலட்டின் மொத்த இருப்பு வரம்பு ரூ. 2000 ஆகும். வாலட்டிற்கு பணத்தை ஆன்லைன் வாயிலாக additional factor authentication அல்லது UPI ஆட்டோபே மூலம் மட்டுமே அனுப்பிட முடியும்.
UPI லைட் எப்போது அமலுக்கு வரும் என இன்னும் அறிவிக்கவில்லை. யுபிஐ லைட் ஆரம்பத்தில் பல வங்கிகள் மற்றும் ஆப்ஸ் வழங்குநர்களுடன் ஒரு பைலட் திட்டமாக தொடங்கப்படும். அத்திட்டம் வெற்றிப்பெறும் பட்சத்தில், மக்களின் பயன்பாட்டிற்காக முழுமையாக வெளியிடப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.