கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யு.பி.ஐ செயலிகளில் பரிவர்த்தனை செய்யும் போது அவ்வப்போது ட்ரான்ஷாக்ஷன் Failed என வருவதை பார்த்திருப்போம். முக்கியமான நேரத்தில் நமக்கு இவ்வாறு ஏற்பட்டிருக்கும். இதை சரி செய்ய சில வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. நெட்வொர்க் பிரச்சனை, தவறான யு.பி.ஐ ஐடி உள்ளிட்ட காரணங்களால் ட்ரான்ஷாக்ஷன் தோல்வியடைந்திருக்கும். இது குறித்து இங்கு பார்ப்போம்.
தினசரி பேமெண்ட் லிமிட்
பெரும்பாலான வங்கிகள் யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கு தினசரி பேமெண்ட் லிமிட் வைத்துள்ளனர். NPCI வழிகாட்டுதல்களின்படி ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் வரை யு.பி.ஐ பரிவர்த்தனைகள் அதாவது ரூ.10,000 என வீதம் 10 முறை பரிவர்த்தனைகள் செய்யலாம். தினசரி பேமெண்ட் லிமிட் தாண்டிவிட்டால் 24 மணி நேரத்திற்கு பின் தான்
பரிவர்த்தனை செய்ய முடியும். பேமெண்ட் செய்யும் போது சிக்கல் ஏற்பட்டால் வேறு வங்கி கணக்கு அல்லது வேறு பேமெண்ட் முறையில் பணம் செலுத்த முயற்சிக்கவும்.
பிஸி பேங்க் சர்வர்கள்
யு.பி.ஐ பரிவர்த்தனை தோல்விகளுக்கு பெரும்பாலான நேரங்களில் பிஸியான பேங்க் சர்வர்கள் காரணமாக உள்ளது. எனவே இதை தவிர்க்க, 1க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கை உங்கள் யு.பி.ஐ ஐடியுடன் இணைப்பது உதவியாக இருக்கும். ஏதாவது ஒரு வங்கி செயலிழந்தால், மற்ற வங்கிக் கணக்கில் இருந்து ணம் செலுத்தலாம்.
பெறுநரின் விவரங்களை சரியாக குறிப்பிடவும்
பணத்தை அனுப்பும் போது வங்கி கணக்கு எண் மற்றும் பெறுநர் வங்கியின் IFSC குறியீட்டை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். பணத்தை அனுப்பும் போது அனுப்புநர் தவறான IFSC குறியீடு அல்லது வங்கி எண் குறிப்பிட்டிருந்தால் பரிவர்த்தனை தோல்வி அடைய வாய்ப்புள்ளது.
இன்டர்நெட்
யு.பி.ஐ பரிவர்த்தனை தோல்விகளுக்கு முதன்மை காரணமாக இன்டர்நெட் டவுன் சிக்கல் உள்ளது. பரிவர்த்தனைகளை செய்யும் போது ஸ்டார்ங் இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும். போனை ரீஸ்டார்ட் அல்லது ஏர்பிளேன் மோட் ஆன் ஆப் செய்து பரிவர்த்தனை செய்வது உதவியாக இருக்கும்.
யு.பி.ஐ லைட்
யு.பி.ஐ பரிவர்த்தனை தோல்விகளுக்கு பெரும்பாலும் பிஸி பேங்க் சர்வர்கள், இன்டர்நெட் டவுன் சிக்கல்களே காரணமாக அமைக்கிறது. அந்த வகையில் யு.பி.ஐ லைட் உதவியாக இருக்கும். கூகுள் பே லைட், பேடிஎம் லைட் ஆகியவைகளில் குறிப்பிட்ட தொகை வரை பின் நம்பர் குறிப்பிடாமல் பரிவர்த்தனை செய்யலாம். அதாவது குறைந்த பரிவர்த்தனை தொகைகளுக்கு இதை பயன்படுத்தலாம். பின் நம்பர் இல்லாமல் ரூ.4000 வரை பரிவர்த்தனை செய்யலாம். தற்போது பேடிஎம், போன் பே செயலியில் யு.பி.ஐ லைட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“