கூகுள் பே, அமேசான் பே, பே டி.எம் போன்றவற்றில் யு.பி.ஐ பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்ய வெவ்வேறு அதிகபட்ச வரம்புகளை அமைத்துள்ளன. யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனைகளைச் செய்வதில் குறிப்பிடத்தக்க வரைமுறையை வைத்துள்ளது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) உத்தரவுபடி, ஒரு நபர் ஒரே நாளில் யு.பி.ஐ மூலம் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மட்டுமே பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.
அமேசான் பே
ஒரே நாளில் ரூ.1 லட்சம் வரையிலான UPI பரிவர்த்தனைகளை
அமேசான் அனுமதிக்கிறது. ஆனால் அமேசான் பேயில் பதிவு செய்த முதல் 24 மணிநேரத்திற்கு அதிகபட்ச வரம்பு ரூ. 5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பே
அமேசானின் பேமெண்ட் தளத்தைப் போலவே, கூகுள் பே மூலம் ரூ. 1 லட்சத்துக்கு மேல் அனுப்ப முடியாது. ஒரு நாளைக்கு செய்யப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையிலும் ஒரு வரம்பு உள்ளது, மேலும் அனைத்து யு.பி.ஐ பயன்பாடுகளிலும் ஒரே நாளில் 10 முறைக்கு மேல் பணம் அனுப்ப முடியாது.
பே டி.எம்
பேடி.எம் யு.பி.ஐ மூலம் ஒரு நாளில் மாற்றக்கூடிய அதிகபட்சத் தொகையின் அதிகபட்ச வரம்பு ரூ. 1 லட்சம். பேடி.எம் யு.பி.ஐ மூலம் ஒரு மணி நேரத்தில் ரூ. 20,000 வரையிலான பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. Paytm UPI மூலம் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ஐந்து பரிவர்த்தனைகள் மற்றும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகள் செய்ய முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“