லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்... ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யலாம்; 30,000mAh திறன் கொண்ட அர்பன் கேம்ப் பவர்பேங்க்!

உள்நாட்டுத் தொழில்நுட்ப பிராண்டான அர்பன் ஸ்மார்ட் வேரபில்ஸ், அதன் சக்திவாய்ந்த அர்பன் கேம்ப் பவர்பேங்க்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஹெவி டியூட்டி மாடலாகும். இதில் 30,000mAh திறன் கொண்ட பிரம்மாண்ட பேட்டரி உள்ளது.

உள்நாட்டுத் தொழில்நுட்ப பிராண்டான அர்பன் ஸ்மார்ட் வேரபில்ஸ், அதன் சக்திவாய்ந்த அர்பன் கேம்ப் பவர்பேங்க்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஹெவி டியூட்டி மாடலாகும். இதில் 30,000mAh திறன் கொண்ட பிரம்மாண்ட பேட்டரி உள்ளது.

author-image
Meenakshi Sundaram S
New Update
Urban Camp Powerbank

லேப்டாப், மொபைல், டேப்... ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யும் ஆல்-இன்-ஒன் அர்பன் கேம்ப் பவர்பேங்க்!

உள்நாட்டு தொழில்நுட்ப பிராண்டான அர்பன் ஸ்மார்ட் வேரபில்ஸ் (Urban Smart Wearables), அர்பன் கேம்ப் பவர்பேங்க் (Urban Camp Powerbank)-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. எப்போதுமே இணைப்பில் இருக்கும் வாழ்க்கை முறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஹெவி டியூட்டி பவர்பேங்க், அதிக செயல்திறன் கொண்ட சார்ஜிங், உறுதியான வடிவமைப்பு, ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது உங்கள் மிகச்சிறிய பேக்பேக்கிலும் எளிதாக வைக்கக்கூடியது. அர்பன் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 2 பவர்பேங்க்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகும். இந்த வரிசையில் 22.5W அவுட்புட் கொண்ட அர்பன் கேம்ப் 2 (Urban Camp 2)-ம் அடங்கும்.

Advertisment

2-ல் மிக சக்திவாய்ந்ததான அர்பன் கேம்ப் பவர்பேங்க்தான். இது 30,000mAh கொண்ட பிரம்மாண்டமான பேட்டரியுடன், 65W அவுட்புட் திறனை வழங்குகிறது. இதனால், லேப்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. மேலும், இது 45W PPD ஃபாஸ்ட் சார்ஜிங்-ஐயும் ஆதரிக்கிறது. 

இந்த பவர்பேங்க், டூயல் டைப்-C PD போர்ட்கள் மற்றும் டூயல் USB-A QC 3.0 போர்ட்கள் உடன் வருகிறது. இதன் மூலம், வேலை மற்றும் பொழுதுபோக்கு இரண்டையும் எளிதில் கையாளத் தயாராக உள்ளது. இதன் கரடுமுரடான டிசைன் (rugged, armoured build) கடினமான சூழல்களிலும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. எனவே, இது தொழில் வல்லுநர்கள், பயணிகள் மற்றும் பயண ஆர்வலர்களுக்கு சரியான தேர்வாகும்.

அர்பன்கேம்ப் பவர்பேங்க் கரடுமுரடான டிசைன் (rugged armoured body) கொண்டிருப்பதுடன் மின்சார விநியோகத்திற்காக அறிவார்ந்த IC தொழில் நுட்பத்தை (intelligent IC technology) கொண்டுள்ளது. இதிலுள்ள டிஜிட்டல் ஸ்டேட்டஸ் டிஸ்ப்ளே நிகழ்நேர சார்ஜ் கண்காணிப்பை அறிய உதவுகிறது. இது எளிமையையும், செயல்திறனையும் ஒருங்கிணைக்கிறது. இந்த பவர்பேங்கின் விலை ரூ. 3,999 மட்டுமே. இதன் 30,000 mAh உயர் திறன் கொண்ட பேட்டரி, அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும் அதிக பவர் தேவைப்படும் பயனர்களுக்கும் மிகவும் ஏற்றதாக உள்ளது.

Advertisment
Advertisements
Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: