/indian-express-tamil/media/media_files/so9jFyvaBznjB1Xlb5Fk.jpg)
எவரெஸ்ட் சிகரத்தின் சிறிய பகுதி, விஞ்ஞான சோதனை கருவிகள், மெசேஜ்கள் மற்றும் மனித எச்சங்களை சுமந்து கொண்டு சந்திரனை நோக்கிச் சென்ற அமெரிக்க விண்கலத்தின் முக்கிய பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விண்கலத்தை அனுப்பிய நிறுவனம் கூறியுள்ளது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா நிலவுக்கு நேற்று பெரெக்ரைன் விண்கலத்தை அனுப்பியது. ஆஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனம் விண்கலத்தில் சந்திர லேண்டரை அனுப்பியது. யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸின் புதிய வல்கன் ராக்கெட் புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து அதிகாலை 2:18 மணிக்கு ஏவப்பட்டது. இந்நிலையில் விண்கலத்தின் "உந்துவிசை அமைப்பில் தோல்வி" ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
அதன் பூஸ்டரிலிருந்து பிரிந்த பிறகு, லேண்டர் ஒரு சிக்கலை எதிர்கொண்டது, இது ஒரு உந்துவிசை தோல்வியால் ஏற்பட்டிருக்கலாம், இது அதன் உள் பேட்டரியை சார்ஜ் செய்ய "நிலையான சூரியனை சுட்டிக்காட்டும் நோக்குநிலையை அடைவதை" தடுக்கிறது. நிறுவனம் பிப்ரவரி 23-ம் தேதி நிலவில் தரையிறங்க திட்டமிட்டுள்ளது. லேண்டர் தற்போது நிலவை நோக்கி ஒரு சுற்று பாதையில் பயணிக்கிறது.
Update #5 for Peregrine Mission One: pic.twitter.com/94wy2J0GyA
— Astrobotic (@astrobotic) January 8, 2024
ஆஸ்ட்ரோபோடிக் கூற்றுப் படி, சுற்றுப்பாதையில் இருந்து பெரெக்ரின் முதல் புகைப்படத்தில் பல அடுக்கு காப்பு (எம்எல்ஐ) "தொந்தரவு" செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது அவர்களின் தரவுகளுடன் ஒத்துப்போகும் முதல் காட்சியாகும், இது உந்துவிசை அமைப்பு செயலிழப்பைக் குறிக்கிறது.
முன்னதாக தகவல்தொடர்பு குறைவாக இயங்கி, "பிளாக்அவுட்" செய்த பிறகு, விண்கலத்தின் பேட்டரி இப்போது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் "முடிந்தவரை பல பேலோட் மற்றும் விண்கல செயல்பாடுகளைச் செய்ய பெரெக்ரைனின் தற்போதைய சக்தியைப் பயன்படுத்துகின்றனர்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா X தளத்தில் கூறுகையில், "விண்வெளி கடினமானது" என்று கூறியது. மேலும் "உந்துவிசை கோளாறு ஏற்பட்டதற்கான மூல காரணத்தை கண்டறிய ஆஸ்ட்ரோபோடிக் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மேலும் இந்த கோளாறு விண்கலத்தில் உள்ள நாசாவின் 5 அறிவியல் கருவிகளை எவ்வாறு பாதிக்கும் என்றும் ஆய்வு செய்து வருறோம் "என்று கூறியது.
We are working with @Astrobotic to identify the root cause of the propulsion issue and evaluate how it affects NASA’s five science investigations aboard the spacecraft.
— NASA (@NASA) January 8, 2024
Space is hard. We support our vendors and look forward to learning all we can. https://t.co/0J9gbuuUCh
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.