/tamil-ie/media/media_files/uploads/2023/04/ls-Aadharcard.jpg)
Aadhaar update
OTP கள் மற்றும் பிற சரிபார்ப்புகள் சரியான முகவரியில் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக, பயனாளர்களின் மொபைல் எண்கள் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடிகளை சரிபார்க்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனுமதிக்கும்.
அந்த வகையில், சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய மொபைல் எண்களில் எந்த ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்திருக்கவில்லை என்பது UIDAI-யின் கவனத்திற்கு சென்றுள்ளது.
தொடர்ந்து, ஆதார் OTP வேறு ஏதாவது எண்ணுக்குப் போய்விடுமோ என்று கவலைப்பட்டனர். இப்போது, இந்த வசதியின் மூலம், வாடிக்கையாளர்கள் இதை மிக எளிதாக சரிபார்க்கலாம்.
அதன்படி, அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in அல்லது மூலம் 'மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்' என்ற அம்சத்தின் கீழ் இந்த வசதியைப் பெறலாம்.
அதேநேரம் ஒருவர் மின்னஞ்சல்/மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்க விரும்பினால் அல்லது அவரது மின்னஞ்சல்/மொபைல் எண்ணைப் புதுப்பிக்க விரும்பினால், அவர் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.