ஆதார், பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு போன்றவை மிக முக்கிய அடையாள அட்டையாகும். அரசின் எல்லா சலுகைகள், விண்ணப்பங்கள் என அனைத்திற்கும் இவை தேவை. இந்நிலையில் வெளியில் எங்காவது செல்லும் போதும், மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்தாலும் இன்ஸ்டண்டாக பான் கார்டு அப்ளை செய்யலாம். ஆன்லைனில் இ- பான் கார்டு உடனே அப்ளை செய்து பெறலாம். இதற்கு ஆதார் கார்டு மட்டும் போதும்.
இ- பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?
1. வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளப் பக்கமான https://www.incometax.gov.in/iec/foportal/ செல்ல வேண்டும்.
2. அங்கு Instant e-PAN பக்கம் சென்று New e-PAN ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3. இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடவும். அடுத்து confirm மற்றும் continue கொடுக்கவும்.
4. அடுத்து உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும்.
5. வேலிடேட் ஆதார் கிளிக் செய்து ஓ.டி.பி கொடுத்து மீண்டும் continue கொடுக்கவும்.
6. அதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட உடன் I Accept கிளிக் செய்து continue கொடுக்கவும். அவ்வளவு தான் ப்ராசஸ் முடிவடைந்து உங்களுக்கு என்ன நிலை என்பதை தெரியப்படுத்தும். இ- பான் கார்டு வந்துவிடும். அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“