ரூ.299-க்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா... ஜியோ, ஏர்டெல்லுக்கு சவால் விடும் வி.ஐ அதிரடி பிளான்ஸ்!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான வி.ஐ (வோடபோன்ஐடியா), தனது 5G நெட்வொர்க் விரிவாக்கத்தை வேகப்படுத்தி, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மதுரையிலும் இந்த சேவையை வழங்க உள்ளது.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான வி.ஐ (வோடபோன்ஐடியா), தனது 5G நெட்வொர்க் விரிவாக்கத்தை வேகப்படுத்தி, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மதுரையிலும் இந்த சேவையை வழங்க உள்ளது.

author-image
WebDesk
New Update
vi 5g coverage

ரூ.299-க்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா... ஜியோ, ஏர்டெல்லுக்கு சவால் விடும் வி.ஐ!

5G சேவை போட்டியில் முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக, வி.ஐ (வோடபோன்ஐடியா) தனது நெட்வொர்க் விரிவாக்கத்தை அதிவேகமாக்கி உள்ளது. ஏற்கனவே டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் களமிறங்கிய வி.ஐ, தற்போது பல புதிய நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்களுக்கு அதிரடி அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் அறிவித்து உள்ளது.

Advertisment

வி.ஐ நிறுவனம் தனது 5ஜி சேவையை டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களுடன் நிறுத்தாமல், 2-ம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஒருபகுதியாக, தென்னிந்தியாவின் முக்கிய மையமான மதுரை மற்றும் விசாக் (Vizag), ஆக்ரா போன்ற நகரங்களில் 5G நெட்வொர்க் விரைவில் முழுமையாக நிலைநிறுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் 17 முக்கிய வட்டாரங்களில் 5G சேவையை வழங்க வி.ஐ. இலக்கு வைத்துள்ளது.

வி.ஐ. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, தனது 5ஜி திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை வழங்குகிறது. இது கூடுதல் டேட்டா தேவையின்றி, அதிவேக இண்டர்நெட்டை அனுபவிக்க உதவுகிறது. 

ப்ரீபெய்ட் (Prepaid): பிளான்ஸ் வெறும் ரூ.299-ல் இருந்து தொடங்குகின்றன. இந்த பிளான்களில் தினசரி டேட்டா ஒதுக்கீட்டுடன் கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது.

Advertisment
Advertisements

போஸ்ட்பெய்ட் (Postpaid): போஸ்ட்பெய்ட் பிளான்கள் மாதத்திற்கு ரூ.451-ல் இருந்து ஆரம்பிக்கின்றன.

வி.ஐ. 5ஜி சேவையைப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறீர்களா? அதற்கு உங்கள் மொபைல் ஃபோனில் இந்த 3 விஷயங்கள் இருக்கிறதா? என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்க ஃபோன் கட்டாயம் 5ஜி இணைப்புக்கு ஆதரவு அளிப்பதாக இருக்க வேண்டும். உங்க சிம் கார்டு 5G சேவையைப் பயன்படுத்தத் தயாராக இருக்க வேண்டும். மொபைல் நெட்வொர்க் செட்டிங்ஸில், 5G-ஐ விருப்பமான நெட்வொர்க் வகையாக (Preferred Network Type) தேர்வு செய்திருக்க வேண்டும். ப்ரீபெய்டில் ரூ.299 மற்றும் போஸ்ட்பெய்டில் ரூ.451-க்கு மேல் உள்ள வி.ஐ. திட்டங்களில் நீங்கள் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். தகுதி உள்ள அனைத்து 5ஜி பிளான்களிலும், தினசரி டேட்டா ஒதுக்கீட்டுக்கு மேல், அன்லிமிடெட் 5G டேட்டா சலுகை வழங்கப்படும் என வி.ஐ. நிறுவனம் தெரிவித்துள்ளது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: