VI hikes price for Rs 598 and Rs 699 family postpaid plans Tamil News : வோடபோன் ஐடியா (வி) தனது குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. ரூ.598 வி திட்டத்திற்கு இப்போது உங்களுக்கு ரூ.649 செலவாகும். ரூ.699 வி குடும்பத் திட்டத்தையும் உயர்த்தியுள்ளது. இப்போது இதன் விலை ரூ.799. போஸ்ட்பெய்ட் வோடபோன் திட்டங்கள் இரண்டும் இந்தியா முழுவதும் கிடைக்கின்றன என்று டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது.
ரூ.649 வி குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்
ரூ.649 குடும்பத் திட்டத்துடன், 80 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு சலுகைகளைப் பெறுவீர்கள். இந்த பேக் இரண்டு இணைப்புகளை ஆதரிக்கிறது. முதன்மை உறுப்பினர் 50 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம் மற்றும் இரண்டாம் நிலை பயனருக்கு 30 ஜிபி டேட்டா கிடைக்கும். கூடுதல் டேட்டாவைப் பெற ஒருவர் எப்போது வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்யலாம். இந்தத் திட்டம், 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியுடன் (முதன்மை பயனர்) வருகிறது. மேலும், அமேசான் ப்ரைம், ZEE5 மற்றும் வி திரைப்படங்கள் மற்றும் டிவியில் இலவச வருடாந்திர சந்தாவை உள்ளடக்கியது. வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபிக்கு இலவச அணுகலைப் பெறுகிறார்கள்.
ரூ.799 வி குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்
முன்பு ரூ.749-க்கு கிடைத்த இந்தத் திட்டம் தற்போது ரூ.799 விலைக்கு கிடைக்கிறது. இந்தத் திட்டம் மூன்று இணைப்புகளை ஆதரிக்கிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் 120 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியையும் கொண்டுள்ளது. முதன்மை பயனர்கள் 60 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம் மற்றும் இரண்டாம் நிலை உறுப்பினர் 30 ஜிபி டேட்டா பெறுவார்கள். மீதமுள்ள டேட்டாவை மூன்றாவது உறுப்பினரால் பயன்படுத்தலாம்.
இது தவிர, வோடபோன் ஐடியா 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு சலுகைகளையும் இலவசமாக வழங்குகிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, அமேசான் ப்ரைம், ZEE5, மற்றும் வி திரைப்படங்கள் மற்றும் டிவிக்கு கூடுதல் செலவில்லாமல் இலவச சந்தாவைப் பெறுவீர்கள்.
பிற வி குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
ரூ.999 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கு எந்த விலை உயர்வும் இல்லை. அது இன்னும் 200 ஜிபி டேட்டா நன்மைகளுடன் கிடைக்கிறது. முதன்மை பயனருக்கு 80 ஜிபி டேட்டா மற்றும் இரண்டாம் நிலை உறுப்பினர்களுக்கு 30 ஜிபி டேட்டா கிடைக்கும். முதன்மை மற்றும் நான்கு இரண்டாம் பயனர்கள் உட்பட 5 இணைப்புகளை இந்த திட்டம் ஆதரிக்கிறது.
ரூ.1,348 வி குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டமும் உள்ளது. முதன்மை இணைப்பு அன்லிமிடெட் நன்மைகளைப் பெறும் மற்றும் இரண்டாம் நிலை இணைப்பு 30 ஜிபி வரை கிடைக்கும். மற்ற திட்டங்களைப் போலல்லாமல், இது ஒரு வருடத்திற்கு நெட்ஃப்ளிக்ஸ் அடிப்படை திட்டத்திற்கு இலவச அணுகலையும் விமான நிலையங்களில் இலவச லாஞ் அணுகலையும் வழங்குகிறது. மீதமுள்ள நன்மைகள் வோடபோனின் மேற்கூறிய போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு ஒத்தவை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil