Advertisment

ஆண்டு முழுவதும் அமேசான் ப்ரைம் சந்தா இலவசம்: வி.ஐ-ன் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்

வோடபோன் ஐடியா (வி.ஐ) வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
VI revises prepaid plans 2021 new recharge plans Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வோடபோன் ஐடியா (வி.ஐ) ரூ.3,199 விலையில் அமேசான் ப்ரைம் வீடியோ சந்தாவுடன் வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ்  திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆண்டு முழுவதும் அமேசான் ப்ரைம் வீடியோ மொபலை வெர்ஷனை இலவசமாக பயன்படுத்தலாம். 

Advertisment

புதிய திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2ஜிபி டேட்டா பெறலாம். அதோடு ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி உள்ளது. வி.ஐ-ன் போட்டி  நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவையும் இதேபோன்ற வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன.

மேலும் இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக 12:00am முதல் 6am வரை அன்லிமிடெட் இலவச டேட்டவை பெறலாம். அதோடு வார இறுதி டேட்டா ரோல்ஓவர் அம்சம் மூலம், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த வாரத்தில் பயன்படுத்தலாம். 

ரூ. 3,199 வருடாந்திர திட்டம் 

ரூ. 3,199 வருடாந்திர ரீசார்ஜ் திட்டமானது, அமேசான் பிரைம் வீடியோ மொபைல் வெர்ஷனுடன் ஒரு வருடத்திற்கு மொத்தம் 730ஜிபி டேட்டாவை  வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் வசதிகளை வழங்குகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Vodafone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment