VI launches Rs 267 prepaid recharge plan comparison with Jio Airtel plans Tamil News : வி (முன்னர் வோடபோன் ஐடியா என்று அழைக்கப்பட்டது), ரூ.267 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொலைதொடர்பு ஆபரேட்டரின் மற்றொரு மொத்த டேட்டா தொகுப்பு. நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) கட்டுப்பாடுகள் இல்லாத வாடிக்கையாளர்கள், மொத்தம் 25GB டேட்டாவை பெறுகிறார்கள். இதில் அடிப்படையில் டேட்டாவில் தினசரி வரம்பு இல்லை என்பதோடு ஒரு நாளில் நீங்கள் விரும்பும் அளவுக்குத் டேட்டாவைப் பயன்படுத்தலாம். ரூ.267 ப்ரீபெய்ட் திட்டம் பற்றி மேலும் அறியப் படிக்கவும்.
வி-ன் ரூ.267 ப்ரீபெய்ட் திட்டம்
மொத்த டேட்டா 25 ஜிபி தவிர, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு நன்மைகளை வி வழங்குகிறது. மேலும் இது, 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளும் அடங்கும். பயனர்கள், வி மூவிகள் மற்றும் டிவி பயன்பாட்டை அணுகலாம். இந்த திட்டம் முதலில் Onlytech-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கூகுள் பே அல்லது பேடிஎம் வழியாகவும் வாங்கலாம்.
வி-ன் ரூ.267 பேக் vs ஜியோவின் ரூ.247 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் ரூ.247 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது தினசரி அன்லிமிடெட் டேட்டா கொண்டிருக்கிறது. வி-ன் ரூ.267 ப்ரீபெய்ட் பேக்கைப் போலவே, இதுவும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மொத்தம் 25 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. நிறுவனத்தின் பயன்பாடுகளான JioTV, JioCinema மற்றும் பலவற்றிற்கும் வாடிக்கையாளர்கள் இலவச அணுகலைப் பெறுகிறார்கள். நீங்கள் இதனை வாங்கியதும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
வி-ன் ரூ.267 திட்டம் vs ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
இரண்டு தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களை விட ஏர்டெல் அதிக விலை திட்டத்தை வழங்குகிறது. ஏர்டெல்லின் ரூ.299 திட்டத்திலும் டேட்டா வரம்பு கட்டுப்பாடுகள் இல்லை. ஜியோ மற்றும் வி-ன் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த திட்டத்துடன் 5 ஜிபி கூடுதல் டேட்டா பெறுவீர்கள்.
இந்த ஏர்டெல் திட்டத்தில் மொத்த டேட்டா 30 ஜிபி, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு சலுகைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இது 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil