Advertisment

கால், டேட்டா அனைத்தும் அன்லிமிடெட்: 4 புதிய சர்வதேச ரோமிங் பேக்குகளை அறிமுகம் செய்ய வி.ஐ

வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு 4 புதிய சர்வதேச ரோமிங் பேக்குகளை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

author-image
WebDesk
Jun 11, 2023 14:08 IST
VI International roaming plans

VI International roaming plans

வோடபோன் ஐடியா இந்தியாவின் மூன்றாவது பெரிய மொபைல் நெட்வொர்க் ப்ரோவைடராக இருந்து வருகிறது. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என முறையே ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள தங்கள் நண்பர்கள், உறவினர்களை தொடர்பு கொள்ள ஏதுவாக சர்வதேச ரோமிங் பேக் மொபைல் நெட்வொர்க் ப்ரோவைடர்கள் வழங்கி வருகின்றன.

Advertisment

அந்த வகையில் வோடபோன் ஐடியா(வி.ஐ) புதிய 4 சர்வதேச ரோமிங் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. ரூ.599-ல் தொடங்கி ரூ.4499 வரை வெவ்வேறு வேலிடிட்டி திட்டங்களை வழங்குகிறது.

அனைத்து திட்டங்களும் 29 நாடுகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இந்த திட்டங்களில் அன்லிமிடெட் காலிங், டேட்டா, மெசேஜ்களை வழங்குகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, தாய்லாந்து, இத்தாலி, யுஏஇ, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் பல பிரபலமான நாடுகளுக்கு பயன்படுத்தலாம். போஸ்ட்பெய்ட் திட்டங்களை போல ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் அன்லிமிடெட் சர்வதேச ரோமிங் பேக் வசதி உள்ளது.

திட்டங்களின் விலை

ரூ. 599 சர்வதேச ரோமிங் திட்டம் மிகவும் குறைந்த விலை திட்டமாகும். அனைத்து திட்டமும் அன்லிமிடெட் திட்டங்களாக உள்ளன. அன்லிமிடெட் காலிங் வசதி, டேட்டா, மெசேஜ் வழங்கப்படுகிறது. ரூ. 599 திட்டம் 24 மணி நேரம் வேலிடிட்டி கொண்டது. ரூ. 2,999 திட்டம் 7 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. 10-நாள் அன்லிமிடெட் திட்டம் ரூ.3,499 ஆகும். இறுதியாக மிகவும் விலையுயர்ந்த அன்லிமிடெட் சர்வதேச போஸ்ட்பெய்ட் ரோமிங் திட்டம் ரூ.4,499, 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vodafone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment