Advertisment

அடேங்கப்பா… 130ஜிபி இலவச டேட்டா; வோடபோன் ஐடியா அதிரடி ஆஃபர்: எப்படி பெறுவது?

‘வி.ஐ கேரண்டி புரோகிராம்’ என்ற பெயரில் வோடபோன் ஐடியா தனது ப்ரீபெய்டு பயனர்களுக்கு கூடுதலாக 130ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
VI Vo.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வோடபோன் ஐடியா நிறுவனம் ‘வி.ஐ கேரண்டி புரோகிராம்’ (Vi Guarantee Program) என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இதில் தனது நெர்வொர்கிற்கு வரும் புதிய ப்ரீபெய்டு பயனர்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 130ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது. அதாவது இந்த 130ஜிபி டேட்டா 13 தவணையாக வழங்கப்படும். 28 நாட்களுக்கு ஒருமுறை 10ஜிபி டேட்டா உங்கள் அக்கவுண்ட்டில் ஆட்டோமேட்டிக்காக வரும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.  

Advertisment

எனினும் இந்த கூடுதல் டேட்டா ஒரு பயனர் தங்கள் வழக்கமான டேட்டாவை பயன்படுத்தி முடித்தால் மட்டுமே வழங்கப்படும். பயனர் ரூ.239 திட்டம் அல்லது அந்த திட்டத்திற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தை தகுதியுடையவர் ஆவர். 

கூடுதல் டேட்டாவை எப்படி பெறுவது? 

கூடுதல் மொபைல் டேட்டாவை பெற 121199 அல்லது *199*199# எண்ணிற்கு டையல் செய்ய வேண்டும். இந்த திட்டத்தை 5ஜி போன் உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்த முடியும்.  வோடபோன் ஐடியா இன்னும் 6 முதல் 9 மாதங்களில் 5ஜி சேவை வழங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Idea Vodafone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment