வோடபோன் ஐடியா (Vi) சமீபத்தில் இரண்டு புதிய பட்ஜெட் ஃப்ரெண்ட்லி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்தது. ரூ.150க்குக் குறைவான விலையில், இந்தத் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டம் குறிப்பாக வைஃபை பயனர்களுக்கு உதவியாக இருக்கும். அதிகச் செலவின்றி சிம் ஆக்டிவ் ஆக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.
ரூ.128, ரூ.138 விலையில் 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுள்ளன. இதில் ரூ.128 திட்டம் 18 நாட்கள் வேலிடிட்டி இருக்கும். 100 எம்.பி டேட்டா வழங்கப்படும். அதோடு, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தக்கூடிய 10 உள்ளூர் ஆன்-நெட் நைட்ஸ் நிமிடங்கள் இருக்கும்.
இருப்பினும், அனைத்து உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கும் வினாடிக்கு 2.5 பைசா செலவாகும். ஆனால் எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியாது.
அதே நேரம், ரூ.138 விலையில் வரும் திட்டம் 20 நாட்கள் வேலிடிட்டி இருக்கும். ரூ.128 திட்டம் போலவே இதில் வசதிகள் இருக்கும். இதிலும் 100 எம்.பி டேட்டா வழங்கப்படும். புதிய ரூ.128 மற்றும் ரூ.138 திட்டங்கள் தற்போது அனைத்து பிராந்தியங்களிலும் கிடைக்கவில்லை. இவை தற்போது மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, சென்னை, கேரளா மற்றும் கொல்கத்தா போன்ற சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன.