VI offering free voice and data benefits to low income users Tamil News : குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, ரூ.75 ரீசார்ஜ் திட்ட சலுகைகளைப் பயன்படுத்துவதன் மூலம், வி இலவச வாய்ஸ் அழைப்பு மற்றும் டேட்டாவை வழங்குகிறது. இந்த நிறுவனம் 50MB டேட்டாவுடன் 50 நிமிட வி முதல் வி அழைப்பு சேவையை வெளியிடுகிறது.
ஆனால், இந்த நன்மைகள் 15 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். இது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மதிப்பு ரீசார்ஜ் பேக்குகளுடன் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இந்த புதிய சலுகை, குறைந்த வருமானம் கொண்ட குழு பயனர்கள் லாக்டவுனை தொடர்ந்து அவர்கள் இப்போது தங்கள் வேலை வாழ்க்கையை மீண்டும் தொடங்குகின்றனர் என்பதால் இந்த சலுகை உதவும் என்று தொலைத்தொடர்பு ஆபரேட்டர் கூறுகிறது.
“படிப்படியாக மாநில வாரியாக தளர்வு முயற்சிகள் தொடங்கியதன் மூலம், இந்தியாவின் புலம்பெயர்ந்த உழைக்கும் மக்கள் தங்கள் ஊரிலிருந்து தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். லாக் டவுன் காலத்தில், ப்ரீபெய்ட் தொலைத்தொடர்பு பயனர்களின் ஒரு பிரிவு பல காரணங்களால் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை. மீண்டும் பணியைத் தொடங்குகிறார்கள் என்பதால், இதுபோன்ற அனைத்து வாடிக்கையாளர்களையும் இந்தியாவின் வேகமான 4G நெட்வொர்க்கிற்கு வி அழைக்கிறது” என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள சில்லறை விற்பனையாளரைப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் இதற்கான தகுதியைச் சரிபார்க்கலாம். அங்கு நீங்கள் செயல்படுத்தும் செயல்முறையையும் சரிபார்க்கலாம். மாற்றாக, வாடிக்கையாளர்கள் 121153-ஐ அழைக்கலாம் அல்லது அவர்களின் Vi எண்ணிலிருந்து * 444 * 75 # என்ற எண்ணுக்கு செய்தியை அனுப்பலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil