வோடபோன் ஐடியா நிறுவனம் புதிதாக ரெட்எக்ஸ் என்ற பெயரில் புதிய போஸ்ட்பெய்ட் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.1,201 விலையில் பல்வேறு ஓ.டி.டி தளத்திற்கான சந்தா, ஸ்விகி சந்தா மற்றும் கேஸ்பேக் ஆகிய பல்வேறு சலுகைகள் உள்ளன. இந்த திட்டம் 1 மாதத்திற்கான வேலிடிட்டியை வழங்குகிறது.
Vi RedX ரூ. 1,201 திட்டம்
வி.ஐ ரெட்எக்ஸ் போஸ்ட்பெய்ட் குடும்பத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 முக்கிய ஓ.டி.டி தளங்கள் அமேசான் ப்ரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லிவ், ரெட்ஃபிலிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஓ.டிடி தளக்குள்ளான சந்தாவை வழங்குகிறது.
அதோடு பயனர் 6 மாதங்களுக்கு ஸ்விகி ஒன் பிளஸ் சந்தா மற்றும் ரூ.199க்கும் மேல் உணவு ஆர்ட்ர் செய்தால் இலவச டெலிவரி ஆகியவை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“