வோடபோன் ஐடியா (Vi) இந்தியாவில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு புதிய கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் அதன் திட்டங்களின் விலைகளை அதிகரித்துள்ளது மற்றும் இந்த சமீபத்திய வளர்ச்சி “தொழில்துறை எதிர்கொள்ளும் நிதி அழுத்தத்தை சமாளிக்க” உதவும் என்றும் கூறியுள்ளது.
புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகள் இப்போது ரூ.99-ல் தொடங்கி ரூ.2,399 வரை செல்கின்றன. ரூ.219 மற்றும் அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்டு Vi திட்டங்களுடன் பயனர்கள் அன்லிமிடெட் பலன்களைப் பெறுவார்கள். டெலிகாம் ஆபரேட்டர் சில டேட்டா டாப்-அப் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டங்கள் நவம்பர் 25 முதல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உங்கள் ஃபோன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்யத் திட்டமிட்டால், கூடுதல் கட்டணம் செலுத்த விரும்பவில்லை என்றால் நவம்பர் 25-ம் தேதிக்குள் அதைச் செய்ய வேண்டும். வோடபோன் ஐடியாவின் அனைத்து புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் முழு பட்டியலையும் இங்கே பார்க்கலாம்.
நவம்பர் 25, 2021 முதல் ப்ரீபெய்டு திட்ட விலைகளை உயர்த்தும் Vi : அனைத்து புதிய ரீசார்ஜ் திட்டங்களின் முழு பட்டியல்
Vi ரூ.179 ரீசார்ஜ் திட்டம்
ரூ.149 Vi ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இப்போது ரூ.179-ஆக இருக்கும். இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. நன்மைகளைப் பொறுத்தவரை, இந்த பேக்கில் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு மொத்தம் 2ஜிபி டேட்டா ஆகியவை அடங்கும்.
Vi ரூ.269 ரீசார்ஜ் திட்டம்
புதிய ரூ.269 Vi ரீசார்ஜ் திட்டம் இப்போது அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் தினசரி அடிப்படையில் 1GB டேட்டாவை வழங்குகிறது. இதுவும் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இதே திட்டம் முன்பு ரூ.219-க்கு விற்கப்பட்டது.
Vi ரூ.299 ரீசார்ஜ் திட்டம்
Vodafone Idea வழங்கும் சமீபத்திய ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS உடன் வருகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த திட்டம் நீங்கள் வாங்கிய நாளிலிருந்து 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
Vodafone Idea (Vi) ரூ.359 ரீசார்ஜ் திட்டம்
இது Vi-ன் கடைசி ஒரு மாத திட்டம். ரூ.359 Vi ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வாங்கினால், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு பலன்கள், தினசரி 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவைப் பெறுவார்கள். இது 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
Vi ரூ.479 ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டம் முதலில் ரூ.399-ஆக இருந்தது. ஆனால், வோடபோன் ஐடியா இப்போது இந்த பேக்கின் விலையை அதிகரித்துள்ளது. புதிய ரூ.479 Vi ரீசார்ஜ் பேக் தினசரி 1.5GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும். 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருவதால், 2 மாத வேலிடிட்டியுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டத்தை விரும்புவோர் இதை வாங்கலாம்.
Vi ரூ.539 ரீசார்ஜ் திட்டம்
நிறுவனம் பகிர்ந்துள்ள பட்டியலின்படி, 56 நாட்கள் செல்லுபடியாகும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டுமே நிறுவனம் வழங்கும் என்று தெரிகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.539 ப்ரீபெய்ட் Vi திட்டம் அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2GB தினசரி டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது.
Vodafone Idea (Vi) ரூ.459 ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டம் மொத்தம் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது நீண்ட காலத்திற்கு அன்லிமிடெட் அழைப்பு பலன்களை விரும்புபவர்களை இலக்காகக் கொண்டது. ரூ.459 Vi ரீசார்ஜ் பேக்கில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 84 நாட்களுக்கு 1000 SMS ஆகியவை அடங்கும்.
Vi ரூ.719 ரீசார்ஜ் திட்டம்
Vi வழங்கும் புதிய ரூ.719 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது. Vi வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இதே திட்டம் முதலில் ரூ.599-க்கு கிடைத்தது.
வோடபோன் ஐடியா Idea (Vi) ரூ.839 ரீசார்ஜ் திட்டம்
ரூ.839 ப்ரீபெய்ட் Vi பேக், தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. இதில், அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களைப் பெறலாம். நிறுவனத்தின் இணையதளத்தில் அல்லது வேறு எந்த தளம் வழியாகவும் இந்த பேக் வாங்கினால் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
வோடபோன் ஐடியா (Vi) ரூ.1799 ரீசார்ஜ் திட்டம்
தொலைத்தொடர்பு ஆபரேட்டருக்கு ஆண்டு ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. அதன் விலை இப்போது ரூ.1,799. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் 3,600 எஸ்எம்எஸ்களைப் பெறுகிறார்கள். இது 24GB டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. சில பயனர்களுக்கு இது போதுமானதாக இருக்காது. இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள். இந்த திட்டம் முன்பு ரூ.1,499 ஆக இருந்தது.
Vi ரூ.2,899 ரீசார்ஜ் திட்டம்
புதிய ரூ.2,899 Vi ப்ரீபெய்ட் பேக்கில் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா ஆகியவை அடங்கும். இது வருடாந்திர ப்ரீபெய்ட் பேக் மற்றும் நீங்கள் வாங்கிய நாளிலிருந்து 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதற்கு முன்பு ரூ.2,399-ஆக இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil