Advertisment

நயா பைசா செலவு இல்லை: வீடியோ காலில் பண்டிகை வாழ்த்து கூற சிம்பிள் வழிகள்

Video call apps with zero meeting limit for New year 2021 இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஐந்து வீடியோ அழைப்பு பயன்பாடுகளின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Video call apps with zero meeting limit for christmas and new year 2021 tamil news

Video call apps with zero meeting limit

Video call apps with zero meeting limit : கிறிஸ்துமஸ், புத்தாண்டு எனக் கொண்டாட்டக் காலகட்டத்தில் இருக்கிறோம். உலகளாவிய சுகாதார நெருக்கடியை மனதில் வைத்து நிறையப் பேர் இன்னும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். திருவிழாக் காலங்களில் நேரில் செல்லமுடியவில்லை என்றாலும் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை ஆன்லைனில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்பலாம். இந்த பண்டிகை காலத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் முகம் பார்த்துப் பேச விரும்பினால், அதற்காகப் பல வீடியோ அழைப்பு பயன்பாடுகள் உள்ளன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நீங்கள் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஐந்து வீடியோ அழைப்பு பயன்பாடுகளின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம்.

Advertisment

வாட்ஸ்அப்

இந்த பட்டியலில் முதல் வீடியோ அழைப்பு பயன்பாடு வேறு எதுவுமில்லை வாட்ஸ்அபதான் . வாட்ஸ்அப், இது உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் பயன்பாடுகளில் ஒன்று என்பது நம் எல்லோருக்குமே தெரியும். மேலும், மக்கள் இந்த பயன்பாட்டை செய்தியிடலுக்காக மட்டுமல்லாமல் சாதாரண வீடியோ / வாய்ஸ் அழைப்புகளுக்கும் பயன்படுத்துகின்றனர். குழு வீடியோ அழைப்புகளுக்கு எட்டு பங்கேற்பாளர்கள் வரை இந்த ஆப் ஆதரிக்கிறது. பயனர்கள் தங்களின் குழு அல்லது தனிநபரின் சாட் விண்டோவை திறந்து, பின்னர் மேல் வலது பட்டியில் அமைந்துள்ள அழைப்பு பட்டனை க்ளிக் செய்து வீடியோ அழைப்பில் இணையலாம்.

மெசஞ்சர் ரூம்ஸ்

வெறும் எட்டு பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப் ஆதரவை வழங்குகிறது என்று நீங்கள் நினைத்தால், பேஸ்புக்கின் மெசஞ்சர் ரூம்ஸை முயற்சி செய்யலாம். 50 பங்கேற்பாளர்களைச் சேர்க்க இந்த சேவை உங்களை அனுமதிக்கிறது. மேலும், சமூக ஊடக நிறுவனமான இது உங்களிடம் ஒரு பைசா கூட வசூலிக்காது. வாய்ஸ் அல்லது வீடியோ அழைப்புகளுக்கு எந்தவித வரம்பும் இல்லை. அம்சங்களைப் பொறுத்தவரை, வீடியோ அழைப்பு பயன்பாடு ஹோஸ்ட் லாக் அல்லது இறுதி அறையைப் பயன்படுத்தி தேவையில்லாத பங்கேற்பாளர்களை வெளியேற்ற உதவுகிறது. அனைவருக்கும் ‘ஸர் ஸ்க்ரீன்' இயக்கும் விருப்பத்தைப் பயனர்கள் பெறுகிறார்கள். எந்த மெசஞ்சர் ரூம்ஸ் கூட்டத்திலும் பங்கேற்பாளர்கள் நுழைய ஃபேஸ்புக் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்பாட்டாளர் லாகின் செய்தாலே போதுமானது.

கூகுள் டுவோ

ஒவ்வொரு வீடியோ அழைப்பிலும் கூகுள் மீட் 60 நிமிட சந்திப்பு வரம்பு இருக்கும்போது, எந்த தடங்கலும் இல்லாமல் பயனர்கள் கூகுள் டுவோ பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். கூகுள் டுவோ முற்றிலும் இலவசமானது மற்றும் வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்புகளுக்கு வரம்பு இல்லை. பயனர்கள் தங்களுக்குத் தேவையான அளவு நேரம் அல்லது வேலை செய்யும் வைஃபை இணைப்புக்கான அணுகலை வழங்கினால், அவர்கள் விரும்பும் அளவுக்கு நேரத்தை செலவிட முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. IOS மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிலும் 12 பங்கேற்பாளர்களுக்கு வரை வீடியோ அழைப்பு பயன்பாடு ஆதரிக்கிறது. நீங்கள் அழைக்க முடியாதபோது தனிப்பயனாக்கப்பட்ட வீடியோ மற்றும் வாய்ஸ் செய்திகளை அனுப்பவும் இந்த சேவை உங்களை அனுமதிக்கிறது.

ஜூம்

இந்த வீடியோ அழைப்பு பயன்பாட்டைப் பயன்படுத்தி, ஒருவர் 100 பங்கேற்பாளர்கள் வரை ஹோஸ்ட் செய்யலாம். பயனர்களுக்கு இலவச சேவையை ஜூம் வழங்குகிறது. ஆனால், ஒவ்வொரு குழு அழைப்பிலும் 40 நிமிட சந்திப்பு வரம்பு உள்ளது. பண்டிகை மற்றும் விடுமுறைக் காலம் என்பதால், நிறுவனம் இலவச கணக்குகளுக்கான இந்த வரம்பை உலகளவில் உயர்த்தியுள்ளது. இந்த சலுகை ஏற்கெனவே கிறிஸ்துமஸுக்கு நேரலையில் உள்ளது மற்றும் டிசம்பர் 26 மாலை 4:30 மணி வரை தொடரும். 2021 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு, ஜூம் மீண்டும் டிசம்பர் 30 அன்று இரவு 8:30 மணிக்கு இந்த வரம்பை உயர்த்தும். இந்த சிறப்புச் சலுகை ஜனவரி 2, 2021 அன்று மாலை 4:30 மணிக்கு முடிவடையும். ஒருவருக்கொருவர் சந்திப்புகளுக்கு வரம்பு இல்லை என்பதை நினைவில் கொள்க. உங்களிடம் ஜூம் சந்தா இருந்தால், வரம்பற்ற அழைப்புகளைச் செய்யும்போது சந்திப்பு வரம்பைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

ஸ்கைப் மீட் நவ் (Skype Meet Now)

ஸ்கைப் பழமையான வீடியோ அழைப்பு பயன்பாடுகளில் ஒன்று. கடந்த காலங்களில், இந்த சேவை வெகு தொலைவில் வாழ்பவர்களுடன் இணைக்க நிறையப் பேருக்கு உதவியது. இந்த சேவை 50 பங்கேற்பாளர்கள் வரை ஆதரவை வழங்குகிறது. அதற்காக நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. மற்ற எல்லா வீடியோ அழைப்பு பயன்பாடுகளைப் போலவே, இதுவும் சந்திப்பு வரம்பைக் கொண்டிருக்கவில்லை. அழைப்புகளைப் பதிவுசெய்யும் திறன், அழைப்பை உள்ளிடுவதற்கு முன்பு பின்னணி 'blur' மற்றும் திரை பகிர்வு விருப்பம் போன்ற அம்சங்களையும் நீங்கள் பெறுவீர்கள். இந்த பயன்பாடு, iOS, ஆண்ட்ராய்டு, Mac மற்றும் விண்டோஸுக்கு கிடைக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Video Happy New Year Whats App
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment