Advertisment

ரொம்ப ஈஸி பாஸ்... மொபைல் வீடியோ ‘எடிட்’ செய்ய பெஸ்ட் 5 ‘ஆப்’ஸ்!

Video editing apps: கூகுள் பிளே ஸ்டார் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் கிடைக்கும் 5 வீடியோ ஆப்ஸ் குறித்து இங்கே பார்க்கலாம்,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரொம்ப ஈஸி பாஸ்... மொபைல் வீடியோ ‘எடிட்’ செய்ய பெஸ்ட் 5 ‘ஆப்’ஸ்!

Video editing tamil news

Video editing tamil news, Video editing apps: கன்டென்ட் கிரியேட்டர்கள் பெரும்பாலும் வீடியோக்களைத் தாங்களே எளிதான முறையில் எடிட் செய்யவும், சமூக ஊடக பயன்பாடுகளில் பகிரவும் வழியைத் தேடுவார்கள். கோவிட் -19 காலத்தில் ஸ்மார்ட்போன்களில் வீடியோ எடிட்டிங் தேவை அதிகரித்துள்ளது, ஏனெனில் bloggers, தொழில்முனைவோர், ஸ்டாண்ட்-அப் காமெடியன்கள் என பலரும் தாங்களே வீடியோக்களை எடிட் செய்து தங்கள் பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க விரும்புகின்றனர்.

Advertisment

எனவே, கூகுள் பிளே ஸ்டார் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் கிடைக்கும் 5 வீடியோ ஆப்ஸ் குறித்து இங்கே பார்க்கலாம்,

Video editing apps: வீடியோ ஆப்ஸ்

தொழில்முறை அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வீடியோக்களைத் திருத்த உதவும் Google Play Store மற்றும் Apple App Store இல் ஐந்து வீடியோ எடிட்டிங் பயன்பாடுகள் இங்கே உள்ளன.

புது பட்ஜெட் ஸ்மார்ட்போன்: ரெட்மி, ரியல்மிக்கு சவால் விடும் மோட்டோரோலா ஜி9!

PowerDirector

PowerDirector என்பது வீடியோ எடிட்டிங் செய்வதற்கான சிறந்த ஆப் ஆகும். இந்த ஆப்-ல் நீங்கள் ட்ரிம், ரொட்டேட் , நிறம், எஃபெக்ட்ஸ், குரல் ஒலிப்பதிவு போன்ற அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் உயர் தரத்தில் வீடியோக்களை பதிவிட விரும்பினால் 4k resolution பயன்படுத்தவும் உங்களை அனுமதிக்கும். வீடியோ பதிவு செய்யும் போது சற்று நடுக்கம் தெரிந்தால், அதை முடிந்தளவுக்கு சரி செய்யலாம். custom background (பச்சை திரையைப் பயன்படுத்திய பிறகு), வீடியோ overlays மற்றும் படங்களையும் வீடியோக்களையும்இணைத்தல் போன்ற பயன்பாட்டுக்கு சில pro toolsகளையும் இது வழங்குகிறது.

இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் 50 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது, 4.6 ரேட்டிங் கொண்டுள்ளது. இது உங்கள் Android ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜில் இருந்து 48 எம்பி எடுக்கும். ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் இது அதே ரேட்டிங் கொண்டுள்ளது. எனினும், 146 எம்பி ஸ்டோரேஜை பயன்படுத்தும்.

Video editing tamil news Video editing free softwares Video editing apps வீடியோ எடிட்டிங் ஆப் Video editing apps

Quik

GoPro இன் Quik என்பது மிகச் சிறந்த வீடியோ எடிட்டிங் ஆப்-களில் ஒன்றாகும். உங்கள் கேலரி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்து 200 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் சேர்க்கலாம். ஆப்-ல் கிடைக்கும் பலவகையான இசையிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது ஆடியோவை (MP3, M4A, MP4, MOV, AAC, FLAC, AIFF மற்றும் WAV) பதிவேற்றலாம், இது வீடியோவின் beat மற்றும் mood கொண்டு பொருந்த முயற்சிக்கும். நீங்கள் உருவாக்க விரும்பும் வீடியோ வகைக்கு ஏற்ப வெவ்வேறு வீடியோ பாணிகள் மற்றும் ஃபில்ட்டர்கள் உள்ளன. வீடியோவின் எந்த நேரத்திலும் மெதுவாக அல்லது வேகமாக முன்னோக்கி செல்ல ஆப் உங்களை அனுமதிக்கிறது. உங்கள் வீடியோக்களை HD 1080p அல்லது 720p இல் வினாடிக்கு 60 பிரேம் சேமிக்கலாம்.

குயிக் 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது, மதிப்பீடு 4.7, மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் 100 எம்பி ஸ்பேஸ் எடுத்துக் கொள்ளும். இது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 4.9 என்ற மதிப்பீட்டைக் கொண்டுள்ளது மற்றும் ஐபோன் அல்லது ஐபாடில் 245.1 எம்பி ஸ்பேஸ் எடுக்கும்.

VSCO

வீடியோ எடிட்டிங் என்று வரும்போது VSCO மிகவும் கேஷுவலான ஒரு ஆப் ஆகும். வீடியோவின் white சமநிலையை எளிதில் சரிசெய்ய இது உங்களை அனுமதிக்கிறது. வீடியோ படத்தொகுப்புகள், மாண்டேஜ்கள் போன்றவற்றை உருவாக்கும் போது இது மிகவும் சிறப்பாக உதவி புரியும். பிற வீடியோ ஆப்-களிலிருந்து வேறுபட்டது. மற்ற ஆப்ஸ் போலவே, நீங்கள் முயற்சிக்க ஏராளமான Filter-கள் உள்ளன. மேலும், இந்த ஆப்பிலும் புகைப்படங்களை எடிட் செய்யலாம்.

ஸ்மார்ட்போனில் ஒரே தொல்லை இதுதாங்க… ஆனா தப்பிக்க வழி இருக்கு!

இது 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களுக்குப் பிறகு கூகிள் பிளே ஸ்டோரில் 4.3 ரேட்டிங் கொண்டுள்ளது. இது பிளே ஸ்டோரின் எடிட்டர் தேர்விலும் இடம்பெறுகிறது மற்றும் 52MB அளவு கொண்டுள்ளது. இது ஆப்பிள் ஆப் ஸ்டோரின் எடிட்டர் சாய்ஸிலும் இடம்பெற்றுள்ளது மற்றும் 4.3 ரேட்டிங் கொண்டுள்ளது. இது ஒரு ஐபோன் அல்லது ஐபாட் / இல் 136.3 எம்பி ஸ்பேஸ் எடுக்கும்.

KineMaster

KineMaster என்பது ஸ்மார்ட்போனுக்கான முழு அளவிலான எடிட்டிங் ஆப் ஆகும். நீங்கள் ஒரு வீடியோவை எடிட் செய்ய விரும்பினாலும் அல்லது சில வேடிக்கையான filters சேர்க்க விரும்பினாலும் கைன்மாஸ்டர் ஆப்  இரு வகையான யூஸர்களுக்கும் பயனளிக்கிறது. கூடுதலாக, EQ முன்னமைவுகள், ducking மற்றும் அதிவேக ஆடியோவிற்கான envelope டூல்ஸ் வழங்குகிறது. இது 30fps இல் 4K வீடியோக்களையும்அப்லோட் செய்ய உங்களை அனுமதிக்கிறது.

100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களுக்குப் பிறகு கூகிள் பிளே ஸ்டோரில் KineMaster 4.4 ரேட்டிங் கொண்டுள்ளது. இது Android தொலைபேசியின் சேமிப்பகத்தில் 83 எம்பி ஸ்பேஸ் எடுக்கும். இது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும், 4.7 ரேட்டிங் கொண்டுள்ளது. இது iOS சாதனங்களில் 145.3 எம்பி ஸ்பேஸ் எடுக்கும்.

Video editing tamil news Video editing free softwares Video editing apps வீடியோ எடிட்டிங் ஆப் Video editing tamil news

InShot

InShot என்பது யூடியூப், இன்ஸ்டாகிராம், ஐஜிடிவி, பேஸ்புக், சிங்காரி போன்ற சமூக ஊடக பயன்பாடுகளில் உங்கள் கண்டென்ட்களை பகிர, எடிட் செய்ய சிறந்த எடிட்டிங் ஆப் ஆகும். பல்வேறு தளங்களுக்கு ஏற்றவாறு உங்கள் கன்டென்ட்களின் வடிவமைப்பைத் திருத்த இந்த ஆப் உங்களை அனுமதிக்கிறது. அத்துடன் இசை, voice-overs, மெசேஜ் மற்றும் எமோஜிக்களை சேர்க்கவும். மேலும் நீங்கள் HD / 4K இல் வீடியோக்களையும் அப்லோட் செய்யலாம்.

இன்ஷாட் கூகுள் பிளே ஸ்டோரில் 100 மில்லியனுக்கும் பதிவிறக்கமும், 4.8 ரேட்டிங்கும் கொண்டுள்ளது மற்றும் 36 எம்பி இடைவெளியைக் கொண்டுள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இது 97.8 எம்பி ஸ்பேஸ் எடுக்கும் மற்றும் 4.8 ரேட்டிங் கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment