Video Games : கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நிறைந்திருக்கும் இந்நேரம், மன அழுத்தத்தையும் உருவாக்கும். அதோடு இந்தியா 21 நாட்கள் தேசிய ஊரடங்கில் உள்ளது. இந்த மன அழுத்தத்தில் சிலவற்றைச் சிறந்ததாக்க, எளிய வழி வீடியோ கேம்களை விளையாடுவது தான். வீடியோ கேம்ஸ் அறிவாற்றல் சிந்தனையை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் நீங்கள் விளையாட ஏதுவான சில வீடியோ கேம்களை இங்கே பரிந்துறைக்கிறோம்.
பப்ஜி
IOS மற்றும் Android இரண்டிலும் உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டுகளில் PUBG கேமும் ஒன்றாகும். இதனை விளையாடுவது ரொம்ப ஈஸி. டீம் டெத் மேட்ச், பேட்டில் ராயல் போன்ற வித்தியாச மோடை கொண்டிருப்பதால், இந்த விளையாட்டை நீங்கள் நிச்சயம் விளையாடலாம். அதோடு சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் உங்கள் நண்பர்களும் அவர்கள் வீட்டிலிருந்தே, உங்களுடன் இந்த கேமை விளையாடலாம்.
லூடோ ஸ்டார்
உங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றி நீங்கள் நினைவுபடுத்த விரும்பினால், லுடோ ஸ்டாரைப் பதிவிறக்கலாம். உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும் லுடோவை விளையாட முடியும். குரல் அல்லது டெக்ஸ்ட் மூலமாக அவர்களுடன் அரட்டையடிக்க முடியும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அறை தோழர்களுடனும் இந்த விளையாட்டை விளையாடலாம். அதோடு இந்த விளையாட்டின் மூலம் புதிய நண்பர்களையும் உருவாக்க முடியும்.
அஸ்பால்ட் 9 : லெஜண்ட்ஸ்
இது ஒரு தூய பந்தய விளையாட்டு. உண்மையான ரேஸ் காரால் செய்யக்கூடிய சிலிர்ப்பை உங்களுக்கு வழங்கும். கேம் என்ற சிந்தனையை அகற்றி, கூடுதல் யதார்த்தத்தை உங்களுக்கு வழங்குகிறது.
The Last of Us (PlayStation 4)
இந்த விளையாட்டின் பெயரைப் படியுங்கள். ஆம், அதுதான். நிச்சயமாக கொரோனா வைரஸ் மக்களை அரக்கர்களாக மாற்றவில்லை, ஆனால் அதை நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. பிற மனிதர்களால் நீங்கள் கொல்லப்பட வாய்ப்புள்ள ஒரு அபோகாலிப்டிக் பூமியில் வாழ முயற்சிப்பதைப் பற்றியது. இந்த விளையாட்டு எதிர்காலத்தைப் பற்றி மக்களை கவலையடையச் செய்யலாம், எனவே இதை எச்சரிக்கையுடன் விளையாடுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
Tom Clancy’s The Division 2 (PlayStation 4, Xbox One, PC)
இந்த விளையாட்டு தற்போதைய சூழ்நிலையில் மிகவும் தொடர்புடையது. எனவே கவனத்துடன் விளையாடுங்கள்.
FIFA 2020 (PlayStation 4, Xbox One, PC)
கால் பந்தாட்ட பிரியர்கள் இந்த கேமில் நிச்சயம் பொழுது போக்கலாம்.
போக்கிமேன்
நேரத்தை ஃபன்னாக மாற்ற விரும்புபவர்கள் இந்த விளையாட்டை விளையாடலாம். இதன் மூலம் நீங்கள் கற்பனையான போகிமேன் உலகில் பயணிக்கலாம். பல்வேறு போக்கிமேன்களை கைப்பற்றி, நேரத்தை சுவாரஸ்யமாக்கலாம்.
Super Mario Maker 2
மரியோ மிகவும் பிரபலமான வீடியோ கேம் கதாபாத்திரங்களில் ஒன்றாகும். இதனை ஆன்லைனிலும் விளையாடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.