வீடியோ கேம் மூலமாக இனி கல்வி: ஏன், எப்படி, எங்கே?

பில் அண்ட் மிலின்டா கேட்ஸ் ஃபவுண்டேசன், பியர்சன், எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ், யுனெஸ்கோ மற்றும் சில நிறுவனங்கள் இது போன்ற திட்டங்களுக்கு அதிக ஆதரவினை அளிக்கின்றது.

காலங்காலமாக வீடியோ கேம்களால் குழந்தைகள் கெட்டுப் போகின்றார்கள் என்று கூறிக் கொண்டே இருக்கின்றார்கள். வன்முறையை தூண்டும் வகையில் தான் வீடியோ கேம்கள் வடிவமைக்கப்படுகின்றன என்பதெல்லாம் மிகவும் பழைய கதை. பழைய நிலையை மாற்றி அமைக்க, கல்வியுடன் கூடிய வீடியோ கேம்களை பள்ளிகளிலும் குழந்தைகளிடத்திலும் கொண்டு சேர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Zigor Hernandorena Juarros

கருத்தரங்கில் பேசிய ஜிகர் ஹெர்நந்தோனா ஜுவரோஸ்

பாடம் நடத்தும் முறையும், வீடியோ கேம்மும் சேர்ந்து மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமாக, கற்றல் திறன்களை மேம்படுத்தலாம். இது குறித்து யுனெஸ்கோ எம்ஜிஐஇபி (UNESCO MGIEP) நடத்திய கருத்தரங்கில் ஜிகர் ஹெர்நந்தோனா ஜுவரோஸ், உபிசாஃப்ட் நிறுவனத்தின் திட்ட மேலாளர் பேசினார். இது குறித்து அவர் பேசுகையில் ”விளையாடிக் கொண்டே படித்தல் என்பது மிகவும் சுவாரசியமானது. தற்போது வரும் வீடியோ கேம்கள் படிப்பிற்கும் அதிக அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள்

கேம்மின் தொடக்கத்தில், விளையாடுபவர்களுக்கு, விளையாட்டின் அடிப்படையை புரிந்து கொள்ளுமளவில் வடிவமைக்கப்படும். பின்னர், ஒவ்வொரு லெவலையும் முடிக்கும் போது, கடினமான டாஸ்க்குகள் விளையாட்டில் அறிமுகப்படுத்தப்படும்.

பொதுவாக ஒரு நான்கு மணி நேர வகுப்பில், முதல் ஒரு மணி நேரம் மட்டுமே கவனமாக பாடத்தினை கவனிப்போம். இரண்டாவது மணி நேரத்தில் பாடத்தில் இருந்து கவனம் சிதறும். மூன்றாவது மற்றும் நான்காவது மணி நேரத்தில் மூளை வேலையே செய்யாது. ஆனால் ஒரு நான்கு மணி நேர வகுப்பில் 10-15 மணி நேர இடைவேளையை நமக்களித்தால் நம் மூளை சீராக இயங்கிக் கொண்டிருக்கும். அப்படித்தான் வீடியோ கேம் மூலம் கற்றுக் கொள்ளும் போது மூளை இயங்கிக் கொண்டே இருக்கும்.

தற்போது இருக்கும் கல்வி நிலையங்கள் மாற்றுக் கொள்கையுடன் சிந்திப்பதை ஊக்குவிப்பதில்லை. கற்றுக் கொள்ளுதல் என்பது மிகவும் எளிமையாகவோ அல்லது மிகவும் கஷ்டமானதாகவோ இருப்பதற்கு பதிலாக ஜாலியாக கற்றுக் கொள்ளும்படி இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரும் வீடியோ கேம்களின் நிலை அப்படியாக இருப்பதில்லை.

‘மைன்கிராஃப்ட்எடு’ என்ற கல்விக்காக உருவாக்கப்பட்ட வீடியோ கேமினை நாற்பது நாடுகளில் இருக்கும் 7000 பள்ளிகளில் மாணவர்களுக்காக அளிக்கப்பட்டிருக்கின்றது. பிரான்ஸினைச் சேர்ந்த உபிசாஃப்ட் நிறுவனம் தற்போது ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள், மற்றும் கேம் உருவாக்குநர்களை வைத்து கல்விக்காக புதிய கேம்களை உருவாக்கும் திட்டத்தில் செயல்பட்டு வருகின்றது.

உலகில் சுமார் 2.5 பில்லியன் மக்கள் பல்வேறு வடிவங்களில் வீடியோ கேம்களை விளையாண்டு வருகின்றார்கள். எனவே கல்வி நிலையங்களில் வீடியோ கேம் மூலம் கல்வி கற்கும் முறையினை அறிமுகப்படுத்துவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. பில் அண்ட் மிலின்டா கேட்ஸ் ஃபவுண்டேசன், பியர்சன், எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ், யுனெஸ்கோ மற்றும் சில நிறுவனங்கள் இது போன்ற திட்டங்களை அதிகம் ஊக்குவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close