Vodafone-idea brings 2 new affordable prepaid plans: வோடபோன்- ஐடியா நிறுவனம் இந்தியாவில் 3-வது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லுக்கு அடுத்தபடியாக வோடபோன்- ஐடியா உள்ளது. இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்ட நிலையில் ஜியோ, ஏர்டெல் தங்கள் சேவையைத் தொடங்கி பல நகரங்களில் போட்டி போட்டு விரிவுபடுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் வோடபோன்- ஐடியா இன்னும் 5ஜி சேவைத் தொடங்க வில்லை. டெலிகாம் ஆபரேட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வெளியிடுவதில் சவால்களை எதிர்கொள்ளும் போது, பயனர்களை மகிழ்விக்கும் வகையில் 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.289 மற்றும் ரூ.429 விலையில் 2 அன்லிமிடெட் பிரிவு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
வோடபோன் ரூ. 289 திட்டம்
ரூ. 289 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி உள்ளது. அதோடு பல நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது. ரூ. 289 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 600 எஸ்.எம்.எஸ், 4 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி பெற முடியும். இந்த திட்டத்தின் சிறப்பு 48 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் டேட்டா பயன்பாட்டில் ஒரு நாள் உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை. அதாவது 48 நாட்களுக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் ரூ.429 திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.429 திட்டம் அதிக பட்சமாக 78 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, 6 ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த சலுகைகள் 78 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் கூட ஒரு நாள் டேட்டா உச்ச வரம்பு கிடையாது. இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்கள் 78 நாட்களுக்கு 6 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள்.
இவ்விரு திட்டங்களின் சிறப்பும் வேலிடிட்டி நாட்கள் ஆகும். டேட்டா குறைவாக இருந்தாலும் வைஃபை பயன்படுத்தும் பயனர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். ஜியோ, ஏர்டெல் இரண்டும் 299 ரூபாய்க்கு திட்டங்களை வழங்குகிறது. ஆனால் வேலிடிட்டி குறைவு. 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/