மேலும் படிக்க : பன்ச் ஹோல் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது விவோ வி17 ஸ்மார்ட்போன்!
3டி க்ளாஸ் பாடி வடிவமைப்பு மற்றும் வெர்ட்டிக்கிள் எல்.ஈ.டி ஸ்ட்ரிப் ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. 6.41 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த கேமிங் ஸ்மார்ட்போன். இதன் ரெசலியூசன் 2,340 x1,080 பிக்சல்களாகும். புகைப்படம் கரன்வீர் சிங் அரோரா
மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. 12 எம்.பி. சோனி IMX363 பிரைமரி சென்சார் கொண்டுள்ளது. 12 எம்.பி. வைட் ஆங்கிள் கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் இதில் பொறுத்தப்பட்டுள்ளது.
இன் - டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இதில் பொறுத்தப்பட்டிருக்கிறது. 12ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் ஆகியவை இந்த ஸ்மார்ட்போனின் ஹையர் எண்ட் வெர்சனாகும்.
விவோவின் சார்ஜர் 44வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. போனை வெறும் 45 நிமிடத்தில் சார்ஜ் செய்துவிட இயலும். பேட்டரி செயற்திறன் 4,000mAh ஆகும்.
விவோ 44வாட்ஸ் சூப்பர்ஃப்ளாஷ் சார்ஜிங் டெக்னாலஜி 6ஜிபி ரேம் வேரியண்ட்டில் இல்லை என்பது மட்டு கொஞ்சம் வருத்தமான விசயம்.
நீங்கள் நிறைய நேரம் விளையாடினாலும் கூட இந்த ஸ்மார்ட்போனை சில்லுனு வைத்துக் கொள்ள சூப்பர் லிக்விட் கூலிங் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.
6GB RAM+128GB ROM என்ற ஸ்டோர்ஜூடன் கூடிய ஸ்மார்ட்போனின் விலை 2,998-ல் ஆரம்பமாகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ. 31,700 ஆகும்.