Vivo, Nokia, Motorola Smartphones India : 2020-ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், இந்தியா போன்ற சந்தைகளில் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் அறிமுகப்படுத்த புதிய சாதனங்கள் இன்னும் உள்ளன. நவம்பர் 26-ம் தேதி இந்தியாவில் இரண்டு புதிய தொலைபேசிகளை நோக்கியா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனை டிசம்பர் 2-ம் தேதி அறிமுகம் செய்வதாக வதந்தி பரவியுள்ளது. மோட்டோரோலா மோட்டோ ஜி 5 ஜி மற்றும் மோட்டோ ஜி 9 பவர் போன்களையும் அறிமுகப்படுத்துவோம் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இவற்றைப் பற்றின விரிவானத் தகவல்களை மேலும் பார்க்கலாம்.
விவோ வி 20 ப்ரோ
இந்த நிறுவனம் ஏற்கெனவே விவோ வி 20 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோ பதிப்பு டிசம்பர் 2 -ம் தேதி தொடங்கவிருக்கிறது. அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, சாதனத்தின் முன்பதிவு சலுகைகள் மற்றும் பிற விவரங்கள் ஆன்லைனில் இருக்கும். இந்தியாவில் சுமார் ரூ.29,990 விலைக்கு விற்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவுக்கு வெளியே விவோ வி 20 ப்ரோ சந்தையில் களமிறங்கியதால், சாதனத்தின் விவரக்குறிப்புகளை பார்க்கலாம்.
இது, 6.44 இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765G SoC மற்றும் 33W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,000 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், அண்ட்ராய்டு 11-ஐ இயக்குகிறது. டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் சாம்சங் ஐசோசெல் ஜி.டபிள்யூ 1 சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் ஆகியவை இருக்கின்றன. முன்பக்கத்தில், 44 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.
நோக்கியா 2.4
நவம்பர் 26-ம் தேதி நோக்கியா 2.4 அறிமுகப்படுத்தப்படும் என்று பிராண்ட் வெளியிட்ட டீஸர் தெரிவித்துள்ளது. இந்த நோக்கியா தொலைபேசி ஏற்கெனவே ஐரோப்பாவில் கிடைக்கிறது. இந்த சாதனம் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே, மீடியா டெக் ஹீலியோ பி 22 SoC மற்றும் 4,500 mAh பேட்டரியை வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 10-உடன் அனுப்பப்படுகிறது மற்றும் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. நோக்கியா 2.4-ன் விலை ஐரோப்பாவில் 119 யூரோ. இந்திய மதிப்பில் சுமார் 10,500 ரூபாய். ஆனால், இந்த கைபேசியின் இந்திய விலை சற்று மலிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 3.4
நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன், நோக்கியா 2.4 கைபேசியுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுழைவு நிலை விவரக்குறிப்புகளை கருத்தில் கொண்டு இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.39 அங்குல எச்டி + டிஸ்ப்ளே, பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பு, பிரத்தியேக கூகுள் அசிஸ்டென்ட் பட்டன், ஸ்னாப்டிராகன் 460 SoC மற்றும் 4,000 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி
இந்த மோட்டோரோலா தொலைபேசியின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி தற்போது தெரியவில்லை. ஆனால், இது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மோட்டோ ஜி 5 ஜி சமீபத்தில் ஐரோப்பாவில் 299.99 யூரோக்கு (சுமார் ரூ.26,300) அறிமுகப்படுத்தப்பட்டது. இது 6.7 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750 ஜி செயலி மற்றும் 20W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜ் கொண்ட 5,000 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் அகல-கோண சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளது. முன்பக்கத்தில், மோட்டோ ஜி 5 ஜி 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இது, தூசி பாதுகாப்புக்காக ஐபி 52 சான்றிதழ் பெற்றிருக்கிறது.
மோட்டோரோலா மோட்டோ ஜி9 பவர்
இந்தியாவில் மோட்டோ ஜி9 பவர் வெளியீட்டு தேதியை இந்த நிறுவனம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஐரோப்பாவில், இந்த சாதனம் 199 யூரோக்கு விற்கப்படுகிறது (தோராயமாக ரூ.17,500). மோட்டோ ஜி 9 பவர் 6.8 இன்ச் எச்டி + ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 662 SoC-உடன் வருகிறது. டிரிபிள் கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. செல்ஃபிக்களுக்கு, 16 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. 20W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000 mAh பேட்டரி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.