விவோ மீடியம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விவோ T3 5ஜி ஸ்மார்ட்போனை மார்ச் 21-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் போனின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
விவோ T3 5ஜி போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ப்ராசஸர் கொண்டது. ட்ரிபிள் கேமரா வசதி ஆகியவை கொண்டுள்ளது. அதோடு போன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் முழு HD+OLED டிஸ்ப்ளே உள்ளது. அனைத்து கிராபிக்ஸ்- இன்டன்சிவ் பணிகளும் Arm Mali G610 GPU உடன் இணைக்கப்பட்ட MediaTek 7200 SoC மூலம் இயக்கப்படும். Vivo T3 ஆனது LPDDR4x ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
விவோ T3, 44W ஃபாஸ்ட் சார்ஜின் வசதியுடன் 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 எம்.பி கொண்ட செஃல்பி கேமரா உள்ளது. மிட்-ரேங் வகை போன் என்று கூறப்படும் விவோ T3 ரூ.20,000 விலையில் விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வெரியண்ட் ரூ.20,000 இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“