/indian-express-tamil/media/media_files/2025/04/24/KLggCfwkT7OHsYwfI1HT.jpg)
ரூ.19,999 பட்ஜெட்ல 7300mAh பேட்டரி, 90W சார்ஜிங்.. இவ்வளவு அம்சங்களா?
விவோ டி4 5ஜி (Vivo T4 5G) ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 50 எம்.பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளியாகி உள்ள விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.
ஓப்போ நிறுவனமும் விவோ நிறுவனமும் கேமரா மீது பிரியம் கொண்ட பயனர்களைக் குறிவைத்து தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில் தற்போது அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை போட்டிபோட்டுக்கொண்டு அடுத்தடுத்து அறிமுகம் செய்கின்றன. ஓப்போ கே 13 5ஜி என்ற ஸ்மார்ட்போனை ஓப்போ அறிமுகம் செய்தது. இதன் பேட்டரி திறன் 7,000mAh. இதனைத் தொடர்ந்து சீனாவின் விவோ நிறுவனம் 7300mAh திறன்கொண்ட விவோ டி4 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
விவோ டி4 5ஜி சிறப்பம்சங்கள்:
6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392x1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் பல அம்சங்கள் உள்ளன.
ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) வசதியுடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
பேட்டரியின் சிறப்புகள்:
விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனைக்கான தனித்துவமாக பேட்டரியின் திறன் உள்ளது. 7,300 mAh திறன் கொண்டது. அதைவிட கூடுதல் சிறப்பம்சமாக, 90W வேகமாக சார்ஜ் ஏறும் திறனுடையது. கார்பன் நானோடியூப், எலக்ட்ரோட் மறுஉருவாக்கம், நானோ கேஜ் வடிவம் போன்றவை பேட்டரியின் திறன் குறையாமல் பார்த்துக்கொள்ளும். ஒருமுறை முழுமையாக ரீசாஜ் செய்தால் 8 மணிநேரம் 30 நிமிடங்களுக்கு தொடர்ந்து விடியோ பதிவு செய்யலாம் என விவோ கூறுகிறது. MIL-STD-810H -மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் ஆதரவு இந்த போனில் உள்ளது.
விவோ டி4 5ஜி விலை?
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி4 5ஜி போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.23,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.25,999 விலையிலும் வாங்க முடியும். வரும் ஏப்ரல் 29-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இந்த விவோ போன் விற்பனைக்கு வருகிறது.
மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த புதிய விவோ போனை ரூ.19,999 விலையில் வாங்கிவிட முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.