/tamil-ie/media/media_files/uploads/2019/11/EJ9si3PU0AAbmqo.jpg)
Vivo U20 budget smartphone specifications, price, launch, availability
Vivo U20 budget smartphone specifications, price, launch, availability, and more : விவோ நிறுவனம் இன்று விவோ யூ20 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தான் இதன் முந்தைய வெர்ஷனான யூ10 வெளியானது.
தற்போது வெளியாகியிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ. 10,990 (4ஜிபி ரேம் /64ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ்). இதனைத் தொடர்ந்து 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 11,990 ஆகும்.
ரேசிங்க் ப்ளாக் மற்றும் ப்ளேஸ் புளு என இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. 28ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.
ஆன்லைன் மூலம் பெற விரும்புபவர்கள் அமேசானில் இந்த ஸ்மார்ட்போனை பெற்றுக் கொள்ளலாம். அமேசான் பல்வேறு சிறப்பு சலுகைகளை இதற்காக வழங்கியுள்ளது. ரூ. 1000 வரை ப்ரீபெய்ட் பர்சேஸ்களுக்கு சலுகை வழங்கியுள்ளது. மேலும் நோ காஸ்ட் ஈ.எம்.ஐ. மூலம் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
Vivo U20 budget smartphone specifications (சிறப்பம்சங்கள்)
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 675 இதில் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் பேட்டரி செயல்திறன 5000 எம்.ஏ.எச் ஆகும். 18 வாட்ஸ் டூயல் எஞ்சின் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி கொண்ட சார்ஜர் மூலம் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
6.53 - இன்ச் ஃபுல் எச்.டி. டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் ரெசலியூசன் 2340×1080 பிக்சல்கள். கிராஃபிக்ஸ் யூனிட்டாக அட்ரெனோ 612 பொறுத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் 9.0 பையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஃபன்டச் ஓ.எஸ். 9 ஸ்கின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும்.
பின்பக்க கேமரா : 16 எம்.பி (ப்ரைமரி கேமரா) + 8 எம்.பி (வைட் ஆங்கிள் சென்சார்) + 2 எம்.பி. (மேக்ரோ சென்சார்)
செல்ஃபி கேமராவின் செயற்திறன் 16 எம்.பி. சென்சார் ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.