2 செல்ஃபி கேமராக்களுடன் வெளியாகும் விவோவின் வி17 ஸ்மார்ட்போன்...

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன்போர்ட் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன்போர்ட் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vivo V17 smartphone specification, price, offers, launch

Vivo V17 Pro specifications, price, availability, launch

Vivo V17 Pro key specifications : முன்பெல்லாம் படங்களையும், அதில் இருக்கும் சீன்களையும், பாடல்களையும் திருட்டுத் தனமாக கசிய விடுவது தான் வழக்கத்தில் இருந்தது. ஆனால் அதற்கு சற்றும் குறைவே இல்லாமல் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. தற்போது விவோவின் வி17 ப்ரோ வெளியாக உள்ள நிலையில், அந்த ப்ோனின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாக துவங்கியுள்ளன.

Advertisment

@bang_gogo_ என்ற ட்விட்டர் கணக்கில் வெளியாகியுள்ள விவோ குறித்த வீடியோ ஒன்றில் இது குறித்த முழுமையான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் நான்கு பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. 48 எம்.பி தான் பிரைமரி கேமராவின் செயற்திறன். செல்ஃபி கேமராவின் செயற்திறன் 32 எம்.பி. ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஏற்கனவே வின்ஃப்யூச்சர் என்ற பக்கத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. டுயல்-பாப் அப் ரியாலிட்டி செல்ஃபி கேமரா இதில் பொருத்தப்பட்டிருப்பது அந்த புகைப்படங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க : மாதாந்திர கட்டணத்தை அதிரடியாக குறைத்த டாட்டா ஸ்கை நிறுவனம்

Vivo V17 Pro key specifications

Advertisment
Advertisements

இந்த ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் ஃபுல் ஸ்கிரீன் கொண்டவை

இதன் அஸ்பெக்ட் ரேசியோ 21.9 ஆகும்

ரெசலியூசன் 1080x2240 பிக்சல்கள்

இன்டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்

செல்ஃபி கேமரா 32 எம்.பி. செல்ஃபி கேமராவையும் 2 எம்.பி. டெப்த் சென்சாரையும் பெற்றிருக்கிறது.

ஸ்நாப்ட்ராகன் 675

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன்போர்ட் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

இதன் பேட்டரி பவர் : 4100mAh

Vivo Smartphone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: