/tamil-ie/media/media_files/uploads/2019/09/vivo-v17-pro-winfuture-2.jpg)
Vivo V17 Pro specifications, price, availability, launch
Vivo V17 Pro specifications, price, availability, launch : விவோ நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. 6 கேமராக்களுடன் வெளியாகிய முதல் போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 8ஜிபி ரேமுக்கு ரூ.29,990 ஆகும். கிளாசியர் ஐஸ் மற்றும் மிட்நைட் ஓசன் என்று இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
Vivo V17 Pro specifications, price, availability, launch
இந்த ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் ஃபுல் எச்.டி + சூப்பர் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை பொறுத்தப்பட்டுள்ளது. இதன் ரெசலியூசன் 2400×1080 பிக்சல்களாகும். இதன் அஸ்பெக்ட் ரேசியோ 20:9 ஆகும். 91.65% ஸ்க்ரீன் டூ பாடி ரேசியோவை கொண்டுள்ளது.
Shott Xensation UP protection-2ஐ முன்பக்கமும், கார்னிங் கொரில்லா க்ளாஸ் 6-ஐ பின்பக்கமும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இதனுடைய பிரைட்னெஸ் 500 நிட்ஸ் ஆகும். அதே போன்று TUV Rhineland சான்றிதழையும் பெற்றுள்ளது.
நான்கு பின்பக்க கேமரா செட்-அப்பை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் பிரைமரி சென்சார் 48 எம்.பி. ஆகும். இரண்டாவது கேமராவின் செயல்திறன் 13 எம்.பி ஆகும். அதே போன்று அல்ட்ராவைட் லென்ஸின் செயற்திறன் 8 எம்.பி மற்றும் 2 எம்.பி. பூக் லென்ஸையும் இது கொண்டுள்ளது.
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 675 ப்ரோசசரை இந்த போன் கொண்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜூடன் உள்ளது இந்த ஸ்மார்ட்போன். 4100 mAh பேட்டரியை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இந்த போன் தற்போது விவோவின் ஈ-ஸ்டோர், பேடிஎம் மால், அமேசான், டாட்டா க்ளின் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற இணையத்தில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.