/tamil-ie/media/media_files/uploads/2019/09/vivo-v17-pro-winfuture-2.jpg)
Vivo V17 Pro specifications, price, availability, launch
Vivo V17 smartphone specification, price, offers, launch, and more : பன்ச் ஹோல் டிஸ்பிளேயுடன் இந்தியாவில் வெளியாக உள்ளது விவோவின் வி17 ஸ்மார்ட்போன். டையமண்ட் ஷேப்பில் இருக்கும் ரியர் கேமரா மாடியூலுடன் வருகின்ற 9ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. வி - சீரிஸில் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விழாவில் கலந்து கொள்ள அனுப்பப்பட்ட அழைப்பிதழின் ஒரு மூலையில் பன்ச் - ஹோல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
எந்த ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளோம் என்ற எந்த விதமான தகவலையும் அந்த நிறுவனம் அந்த அழைப்பிதழில் தராத நிலையில் வி17 - னாக அந்த ஸ்மார்ட்போன் இருக்கலாம் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரஷ்யாவில் சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது தான் இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம்.
To read this article in English
Vivo V17 smartphone specification
இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 22 ஆயிரமாக இருக்கலாம்.
ஸ்நாப்ட்ராகன் 665 ப்ரோசசர் இதில் பொறுத்தப்பட்டுள்ளது.
இதன் பேட்டரி செயற்திறன் 4500mAh பேட்டரி ஆகும்
6.38-இன்ச் சூப்பர் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
8GB RAM, 128GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் மெமரியை 256 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளலாம்.
இன்- டிஸ்பிளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
கேமரா செட் அப்
48 எம்.பி சாம்சங் ஜி.எம்.1 மெய்ன் கேமராவையும், 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸையும், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸையும், 2 எம்.பி. டெப்த் சென்சாரையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். செல்ஃபி கேமரா 32 எம்.பி. செயல்திறனை கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் 9.0 பையை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஃபன்டச் ஓ.எஸ். 9.2 இயங்கு தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.