Vivo V20 Mobile Tamil News: ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வு மூலம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி20 மொபைல் இன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அடிப்படை 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.24,990 விலையில் தொடங்குகிறது. 44 MP செல்ஃபி கேமரா, 64 MP டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் டூவல் டோன் வடிவமைப்பு ஆகியவை விவோ வி20-ன் சில முக்கிய சிறப்பம்சங்கள்.
Advertisment
இந்தியாவில் விவோ வி20-ன் விலை மற்றும் ஸ்டாக்
இந்தியாவில், விவோ வி20 இரண்டு வேரியன்ட்டுகளில் வருகின்றன. அடிப்படை மாடல்கூட 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி சேமிப்பு இடத்துடன் வருகிறது. இந்த மாடலின் விலை ரூ.24,990. விவோ வி20-ன் 'டாப்-எண்ட்' மாடலான இரண்டாவது மொபைல், 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் இடத்துடன் ரூ.27,990 விலையில் வருகிறது.
சன்செட் மெலடி, மிட்நைட் ஜாஸ் மற்றும் மூன்லைட் சொனாட்டா ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. மேலும், இது அக்டோபர் 20-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவிருக்கிறது. அதன் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
Advertisment
Advertisements
விவோ வி20 விவரக்குறிப்புகள்
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விவோ வி19-ன் அடுத்த பதிப்புதான் விவோ வி20. வடிவமைப்பைப் பொருத்தவரை விவோ வி20 பிரமிக்க வைக்கும் பிரீமியம் மாடல் தோற்றம் போன்றே இருக்கிறது. சன்செட் மெலடி, மிட்நைட் ஜாஸ் மற்றும் மூன்லைட் சொனாட்டா உள்ளிட்ட மூன்று அழகான வண்ணங்களில் இந்த தொலைபேசி வருகிறது. ஒரு கையில் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது. இதன் மேட் கண்ணாடி வடிவமைப்பு, இந்தத் தொலைபேசியின் ஒட்டுமொத்த அழகியலை மெருகேற்றுகிறது.
வி சீரிஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் 'கேமரா'விற்கு நிச்சயம் தனியிடம் உண்டு. டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் செல்ஃபிக்களுக்கு முன்புறத்தில் ஒற்றை சென்சார் போன்றவை அனைத்து புதிய விவோ வி20 ஸ்மார்ட்போன்களும் உள்ளன. பின்புற பேனலில் 64MP முதன்மை சென்சார் கிளப், 8MP சூப்பர் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2MP மோனோ கேமரா ஆகியவை பொருத்தப்பட்டிருக்கின்றன. செல்ஃபிக்களுக்கு, 44MP eye autofocus கேமரா உள்ளது. முன் கேமராவில் டூயல் வியூ வீடியோ, steadface செல்ஃபி வீடியோ, 4k செல்ஃபி வீடியோ, மல்ட்டி ஸ்டைல் போர்ட்ரெய்ட் மற்றும் சூப்பர் நைட் செல்ஃபி 2.0 ஆகியவை இருக்கின்றன. சூப்பர் மேக்ரோ, சூப்பர் வைட் ஆங்கிள், சூப்பர் நைட் மோட், மோஷன் ஆட்டோஃபோகஸ் மற்றும் நைட் ஃபில்டர்ஸுடன் பிரதான பின்புற கேமரா தொகுக்கப்பட்டுள்ளது.
Vivo V20 launched in India
6.44-இன்ச் AMOLED FHD + டிஸ்ப்ளேவுடன் 2400x1800p, 20: 9 விகிதம் மற்றும் HDR10 திரை தெளிவுத்திறனுடன் விவோ வி20 சாதனம் வருகிறது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 720 ஜி ப்ராசசர், 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி விரிவாக்கக்கூடிய சேமிப்பு விருப்பம், 4000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த தொலைபேசி இயங்குகிறது. அண்ட்ராய்டு 11 மென்பொருளை அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 11 இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"