விவோ V20 அறிமுகம்: இதில் என்ன ஸ்பெஷல்? உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?

விவோ V20, 7.38 மிமீ திக்னஸ் மற்றும் 171 கிராம் எடை கொண்டது. இது தவிர, V20 ப்ரோ மற்றும் V20SE ஸ்மார்ட்போன்களையும் இந்நிகழ்ச்சியில் விவோ நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By: October 7, 2020, 8:06:28 AM

Vivo V20 mobile Tamil news: வரும் அக்டோபர் 13-ம் தேதி விவோ தனது V20 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த சாதனத்திற்காக ஓர் பிரத்தியேக மைக்ரோசைட்டை (microsite) ஃப்ளிப்கார்ட் அமைத்துள்ளது. இது, 2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.20,000 முதல் ரூ.30,000 விலைப்பட்டியலில் மிகவும் மெல்லிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. விவோ V20, 7.38 மிமீ திக்னஸ் மற்றும் 171 கிராம் எடை கொண்டது. இது தவிர, V20 ப்ரோ மற்றும் V20SE ஸ்மார்ட்போன்களையும் இந்நிகழ்ச்சியில் விவோ நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் எதுவும் அதிகம் நிறுவனம் பகிரவில்லை. இருப்பினும், அதன் உலகளாவிய இணையதளத்தில் ஏற்கெனவே தொலைபேசியின் அனைத்து விவரக்குறிப்புகளையும் இந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

Vivo V20 mobile: விவோ V20 விவரக்குறிப்புகள்

6.44 அங்குல AMOLED dull HD + 2400 × 1080 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டது விவோ V20. இது, அட்ரினோ 618 GPU-யுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ SD கார்டு மூலம் விரிவாக்கக்கூடிய 8GB RAM மற்றும் 128 GB உள் சேமிப்புடன் இந்த சாதனம் வரவுள்ளது. மேலும் இது, நிறுவனத்தின் சொந்த Funtouch OS 11 மற்றும் கூகுளின் ஆண்ட்ராய்டு 11 இயக்க முறைமையைக் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக, கைரேகை சென்சார் மற்றும் face unlock ஆகியவை உள்ளன. இவை அனைத்தும், 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,000mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகின்றன.

பின்பக்கத்தில் 64MP ட்ரிபிள் கேமராவுடன் f/1.89 aperture கொண்ட கேமரா, f/2.2 aperture-உடன் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், 2MP மோனோக்ரோம் சென்சார் போன்றவை உள்ளன. செல்ஃபி எடுப்பதற்காக வாட்டர் டிராப் ஸ்டைலில் 44MP சென்சார் கொண்ட கேமரா இருக்கிறது. சூப்பர் நைட் மோட், ட்ரைபாட் நைட் மோட், மோஷன் ஆட்டோஃபோகஸ், ஐ ஆட்டோஃபோகஸ், ஆப்ஜெக்ட் ஆட்டோஃபோகஸ், சூப்பர் வைட் ஆங்கிள் நைட் மோட், அல்ட்ரா ஸ்டேபிள் வீடியோ, ஆர்ட் போர்ட்ரெய்ட் வீடியோ, சூப்பர் மேக்ரோ, பொக்கே போர்ட்ரெய்ட் மற்றும் மல்டி-ஸ்டைல் போர்ட்ரெய்ட் ஆகியவற்றுடன் கேமரா வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Vivo v20 mobiles in india tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X