Advertisment

பஞ்ச்-ஹோல், சதுர கேமரா அமைப்பு: விவோ வி30 சீரிஸ் விரைவில் அறிமுகம்

3 ஸ்மார்ட் போன்களுடன் விவோ வி30 சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
vivo v30.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விவோ நிறுவனம் விரைவில் வி30 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. விவோ முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக போனின் கேமரா தரத்திற்கு பயனர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் நிறுவனம் அடுத்த சீரிஸ் போன்களை அறிமுகம் செய்கிறது. 

Advertisment

3 ஸ்மார்ட் போன்களுடன் விவோ வி30 சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்தான போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியானது. அதன்படி, வி30 சீரிஸ் போன்கள் மைய அமைப்பில் பஞ்ச்-ஹோல் கொண்டுள்ளன என்றும்  பின்புறத்தில் சதுர கேமரா தொகுதி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் வெளியான போஸ்டர் படி, வி30 சீரிஸ் curved AMOLED டிஸ்ப்ளே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 3 போன்களில் வி30 மற்றும் வி30 ப்ரோ என 2 போன்கள் இருக்கும் என்று அறியப்படுகிறது. 

 விவோ வி30 சீரிஸ் சிறப்பம்சங்கள்

விவோ வி30 சீரிஸ் போன்கள் 2800×1260 பிக்சல்கள் தெளிவுத்திறனுடன் 6.78-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும். 120Hz புதுப்பிப்பு விகிதம் மற்றும் 2800 நிட்ஸ் peak brightness இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. Adreno 619 GPU உடன் Snapdragon 695 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பின்புறத்தில் ட்ரீப்பிள் கேமரா அமைப்பு 64 MP + 8 MP + 2 MP,  அதோடு 50 MP 

செல்ஃபி கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5000 mAh பேட்டரி எனக் கூறப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

 

vivo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment